காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 13 · 13 / 58
கனகர் : சுயம்வரத்துச்
சுந்தரிக்காகக் காத்துக்
கொண்டிருக்கிறார்கள்
போலும் ஹி! ஹி!...
மன்னர்கள் : ஆமாம், நீங்கள் இருவருமே
வந்து விட்டீர்களே! சுயம்வரப் போட்டியில் உங்களில் ஒருவர்
ஜெயித்து விட்டால், அந்தப்
பெண்ணை நீங்கள் இருவரும்
எப்படிப் பங்கு போட்டுக்
கொள்வது?
தமிழ்நாட்டுப் புலவர் : பிறகு பாரத்தான்....
விஜயர் : யாரப்பா நீ ? என்ன பேசுகிறாய் ?
புலவர் : தமிழ்! செந்தமிழ்! உலகத்
தோடு பிறந்த தமிழ்!
கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்தே முன் தோன்றிய மூத்த
தமிழ்!
விஜயர் : சுயம்வர மண்டபத்தில்
உனக்கென்ன வேலை ?
புலவர் : உம் ; விசித்திரமான கேள்வி வேந்தரே!
சுயம்வர மண்டபத்தில் வயதான
உங்களுக்குத்தான் வேலை ;
வாலிபர்களாகிய என்
போன்றவர்களுக்கு வேலை
இல்லை என்பது....
விஜயர் : குறும்பு தேவையில்லை. நீ யார்
என்று கூறு!
புலவர் : நானோர் தமிழ்ப் புலவன் –
வட நாட்டுப் பயணம் வந்தேன்....
கனகர் : புலவனா? கவிதை புனையத்
தெரியுமா உனக்கு ?
புலவர் : கவிதை புனையத் தெரியாத புலவன் –
கத்தி தூக்கத் தெரியாத வீரன் –
இவர்களைத் தமிழகம் இதுவரை
கண்டதே இல்லை.....
கனகர் : அதையும் பார்த்து விடுவோம்.
எங்கே, உடனே, ஒரு கவிதை சொல்லு!
புலவர் : கங்கை நதி தீரத்திலே
போராடினான்-தமிழன்
காவிரியின் ஓரத்திலே புகழ்
காலத்திலே வந்து போராடினால்
காலை ஒடித்திடுவோம் ஜாக்கிரதை.....
மன்னர்கள் : ஹா! ஹா! ஹா!
விஜயர் : கனகர் சொன்னது அட்சரம்
லட்சம் பெறும் ; புலவனே!
இமயத்தின் நெற்றியிலே உம்
மன்னர் புலி – வில் – கயல்
சின்னங்களைப் பொறித்த போது
எப்போதும் மன்னர் ஈங்கில்லை
போலும்!
புலவர் : ஏன் ? காலில் விழுந்து
காணிக்கை செலுத்தவா?
பித்து மனம் கொண்டவரே ;
கேளீர்! இன்றே
தென்னாடு திரும்புகிறேன்.
காவா நாவிற் கனகனும் விஜயனும்
விருந்தின் மன்னர் தம்முடன் கூடி
அருந்தமிழாற்றல் அறிந்திலராகிச்
செப்பியமொழிகளைச் சேரனுக்குணர்த்த
துவேன். மதோன்மத்தர்களே!
மாண்டுவிடவில்லை தமிழர் வீரம்!
ஆரிய மன்னர்கள்! மீண்டும்
சந்திப்போம். ஆண்டு கொண்டிருப்பவன்
சேரன் செங்குட்டுவன்!
சேரன் செங்குட்டுவன்!!
காட்சி 2.
சேரன் கொலுமண்டபம்
சேரன் : வாளேந்தி தமிழகத்தில் புகழேந்தி
வாழும் வேங்கைப் புலிகளே!
வந்து விட்டது உங்களுக்கு
எல்லாம் அழைப்பு!
வட நாட்டிலே மீண்டும் ஓர் முறை
நம் வீரத்தை நிலைநாட்ட
நல்லதோர் வாய்ப்பு! இமயத்திலே
பொறித்திருக்கும் நம் சின்னங்களை
பழித்தார்களாம், சிறுமதி கொண்ட
டோர் சிலர் – புலியைக் கேலி
செய்தான் போர்முனை காணாப்
புல்லன். வில்லை இகழ்ந்தான்
வீரத்தை விலை கேட்கும் வீணன் –
கயலைப் பழித்தான் களம் புகு
கதைகளைக் கேட்டறியாக் கசடன்.
உத்திரனாம் – விசித்திரனாம் –
சித்திரனாம் – சிவேதனாம் –
பைரவனாம்! விழிக்காதீர்கள்!
மனிதர்களின் பெயர்கள்தான்
இவைகள்! இந்த மண்டூகே மன்னர்
களுக்குத் தலைவர்களாம்
கனகனாம் விஜயனாம் கங்கைக்
கரை வாழ் காவலர்கள் காவிரிக்
கரைக்கு அறைகூவல் விடுத்தார்
களாம்! புரட்சி புகட்டுவோம்
அவர்களுக்கு – புறப்படுங்கள்!
ஓர் அமைச்சர் : சோழனுக்கும் பாண்டியனுக்கும்
இல்லாத ஆத்திரம் தங்களுக்கு
மட்டும் ஏன் மன்னவா?
சேரன் : தமிழன் என்பதால் – தன்மான
உணர்ச்சி குன்றாததால்!
சோழனோ பாண்டியனோ
என்னுடைய பகைவனாக இருக்க
லாம், அதற்காக வடநாட்டு ஆரிய
மன்னர்கள் வாலாட்ட விட
மாட்டேன் என் உயிருள்ள வரையில்!
என் தமிழை அல்லவா இகழ்ந்தார்கள் ;
தருக்கார்கள்! ஆ.....குறள்
தந்த கோமானே, வள்ளுவனே!
உன்னை இகழ்ந்தார்கள்....
அத்தாணி மண்டபத்தில் சத்தான
கருத்துரைக்கும் சாத்தனாரே!
அரங்கின் அண்ணலே!
உம்மை இகழ்ந்தார்கள்!
முத்துக்கடலே, முல்லைக்
கொல்லையே, உன்னை
இகழ்ந்தார்கள்! எட்டுத் திக்கும்
முரசு கொட்டி வாழும் சிங்கத்
திருவிடமே, உன்னை இகழ்ந்தார்கள்.
அன்னை நற்சோணையே,
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின்
மகன் செங்குட்டுவனின் வெற்றியை
இகழ்ந்தார்கள்.
இளங்கோ! ஆசைத் தம்பி!
உன்னை இகழ்ந்தார்கள்!
நீதிக்கு உயிர் தந்த பாண்டியனே!
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழி
யனே! உன்னை இகழ்ந்தார்கள்!
செந்தமிழ் வளங் குறையா சிங்க
ஏறுகளே! அறிஞரே! கவிஞரே!
