இதயத்தைத் தந்திடு அண்ணா
பகுதி 4 · 4 / 13
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா முன்றெழுத்து
அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!
திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் சொன்மாரி
வக்கற்றோர் வகையற்றோர்
வாழ்வதற்குத் திட்டம் கோரி
வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகின்றார் அண்ணா எனில்,
எடெல்லாம் வீடெல்லாம் தமிழ்
நாடெல்லாம்... புதுமை மணக்குதங்கே...
“ஏடா தம்பி! எட்டா பேனா....”
“கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு”
கருத்துப் பேழை கற்பூரப் பெட்டகம்!
“மரக்கிளையிலே பிணம்;
வெந்த புண்ணிலே வேல்!”
மறந்திடப் போமோ; மனங்கவர் வாசகம்?
“சாலை யோரத்திலே வேலையற்றதுகள் -
வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் -
வேந்தே! அதுதான் காலக்குறி!”
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?
அறிவு நடை?
“கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது”
தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ!
“இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?”
“தம்பியுடையான் படைக்கஞ்சான்!”
