உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

இதயத்தைத் தந்திடு அண்ணா

பகுதி 3 · 3 / 13

நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ!

வெள்ளம்!

வெள்ளம்!

மாபெரும் வெள்ளம்!

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்

தாயகத்தில் மொழிப் புரட்சி தோன்றுதற்கு

வித்திட்டார் சிலபேர் என்றால்: ஈரோட்டு

நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்

எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சி பூண்டு!

இரு மூன்று திங்கள் வரை சிறையில் வாடி,

தரும் ஊன்றுகோலாகத் தமிழைத் தந்து

அரு மூன்று எழுத்தாலே அண்ணாவானார்...

அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்

சென்னையிலே சொன்னேனே

நினைவுண்டா உங்களுக்கு?

முன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு

முத்தமிழ் மணமுண்டு..

மூவேந்தர் முக்கொடி முக்கனியென

மும்முரசார்த்தவர் தமிழர் - அவர் வாழ்ந்த

தமிழ் “வாழ்வு”க்கு முன்றெழுத்து - அந்த

வாழ்வுக்கு அடிப்படையாம் ‘அன்பு’க்கு முன்றெழுத்து..

அன்புக்குத் துணை நிற்கும் ‘அறிவு’க்கு முன்றெழுத்து

அறிவார்ந்தோர் இடையிலெழும், “காதல்”க்கு முன்றெழுத்து...

காதலர்கள் போற்றி நின்ற கடும் ‘வீரமோ’ முன்றெழுத்து...

வீரம் விளைக்கின்ற ‘களம்’ முன்றெழுத்து...

களம் சென்று காணுகின்ற ‘வெற்றி’ முன்றெழுத்து