இதயத்தைத் தந்திடு அண்ணா
பகுதி 12 · 12 / 13
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை
பெயரும் தந்தார்
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஒளவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சுப் பாரதிக்கும்,
வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் போப்புக்கும் சிலை
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்பத் திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததனால் - அண்ணன் தமிழன் பால் வைத்துள்ள
பற்றுதனை உலகறிய ; அந்த
அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது..
ஆள்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்..
ஆணையிடுகின்றார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ, இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஒரு விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா.. இதயமன்னா...
படைக்கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்தும் பெரும்பயணம் ஏன் தொடர்ந்தாய்...?
உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே!
