உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

இதயத்தைத் தந்திடு அண்ணா

பகுதி 11 · 11 / 13

மனமகிழும்

உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ

காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே

கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!

நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.

பிறந்திட்டான் நம் அண்ணனாக;

அறிவு மன்னனாக

பொதிகை மலைத் தென்றலாய்ப்

போதாகி மலர்கின்ற

தமிழ் உணர்வின் புதுமணமாய்ப்

பதிகத்துப் பொருளாய்ப்

பழந்தமிழர் புறப்பாட்டாய்

வந்துதித்தான் அண்ணன் - கீழ்

வானுதித்த கதிர்போல -

அவன் புகழைப் பாடுதற்கு

அவன் வளர்த்த தம்பி நானும்

அவன் தந்த தமிழ் எடுத்து

இவண் வந்தேன் இதுதான் உண்மை -

தலைவரென்பார், தத்துவமேதை என்பார்,

நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்

சொல்வாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்

மனிதனென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார்.

அன்னையென்பார், அருமொழிக் காவல் என்பார்,

அரசியல்வாதி என்பார் - அத்தனையும்

தனித்தனியே சொல்வதற்கு நேரமென்றோர் - நெஞ்சத்து அன்பாலே

‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால்