உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

குணநாயகர் நேரு

பகுதி 6 · 6 / 7

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மொழிக்குத்

தோதாய்க் கொள்கை தொகுத்துச் சொன்னார்.

காலத்தின் கோலம் காட்டுக்கு ராஜாவாய்க் கர்த்தபம் ஆகும்

ஏலத்தில் சில பேர் கோபுர உச்சியில் குந்திக் கொள்வர்; இந்திய

ஞாலத்தின் தலைவராய் ஜவகர் ஆனது இவ்வித மல்ல!- அவர்

சேலத்து மாம்பழம் - சென்னைக் கடற்கரை -

கொற்கை முத்து - கொள்ளேகால் பட்டு -

தஞ்சைக் கோயில் - தண்புனல் காவிரி -

தரையில் காஞ்சி - தடந்தோள் பாண்டியன் -

கருத்தில் மாறுதல் இருந்த போதிலும்-

காலமானார் நேரு என்றதும்- கண்ணீர் உகுத்தார் கலங்கி அழுதார்

காராக்கிரகம் கிடந்த அண்ணா ...

கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்

கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!

படை துள்ளி வரும் - பகை

அள்ளி வரும் - எரி

கொள்ளி வரும் - கரும்

புள்ளி வரும் - சீனக்

கள்ளி வரும் - எனச் சிலர்

எள்ளி வரும்போது - விடி

வெள்ளி வரும் எனப் - பகை

கிள்ளி எறிந்தான் ... இன்று திருப்

பள்ளி அயர்ந்தான் - நேரு -

திருப்பள்ளி அயர்ந்தான்!