உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

குணநாயகர் நேரு

பகுதி 7 · 7 / 7

‘வாய் மடித்துக் கிடந்த தலைமகனை நோக்கி

மணியதரத் தேதேனும் வரவேண்டாவோ?” எனத்

தாய் அடித்து மோதி அழும் காட்சிகளைப்

பேய் ஆட்டம் போடுகின்ற போர் முகத்தை

நாய் நரிகள் தின்று தின்னும் கொடுமைக் கூத்தைக்

காய், பழம், பூ பிஞ்சு, சாய்ந்து விழும் சமர்க்களத்தை - நம்

கலிங்கத்துப் பரணி சொல்லும்; அந்தக்

கலிங்கத்தில் அமைதி பூண்ட அசோக மன்னன்

கண்டெடுத்த அறவழியில் உலகு காக்க நேரு பிரான்

கழுகுகளின் இறக்கை வெட்டி வெண்புறாவைப் பறக்க விட்டார்

விண்ணின் மேலே! ...

“தலையாகிய அறமே புரி

சரி நீதி உதவுவாய்

சமமே பொருள் ஜனநாயகம்

எனவே முரசறைவாய்” இது

அலை மோதிடும் புதுவையின்

கலைமேவிய பாவலன் - நம்

நிலை மாற்றிப் பாடிய காவியம்!

ஜனநாயகம் ஜனநாயகமென

ஜவகரும் முழங்கிடச்-சிலர்தம்

தனிநாயகம் சிறந்திடச் செயல்பட்டதை மறந்திடோம்-

பணநாயகம் கணநாழியில் தகர்ந்திடக்

குணநாயகர் நேருவும் உடன் முனைந்திடக்

காலந்தான் போதவில்லை

காலமுமே பொறுக்கவில்லை!