உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

குணநாயகர் நேரு

பகுதி 5 · 5 / 7

துடி துடிக்கும் எழுத்தில்-தேன் ஒரு

படி இனிக்கும் பண்பில்-அதிர்

வெடி முழக்கும் செயலில்-விடாப்

பிடி இருக்கும் குணத்தில்-விடுதலைக்

கொடியிருக்கும் கையில்-கொஞ்சம்

முடியிருக்கும் தலையில்

(இங்கென்ன வாழ்கிறதோ? எனக் கேட்டார் எனைப் பார்த்து!)

நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்

நேர் நின்று எதிர்த்ததாலே நேருவானார்...இந்திய

நீள் எல்லைக்கோடு தன்னைப் பெரும்பகைவர் கடந்தபோது-என்ன

நேருமோ என்றேங்கி இருந்த மக்கள்

நெஞ்சின் துயர் துடைத்து, எதுவும்

நேராது நான் இருக்குமட்டும் எனச் சொல்லி நேரு வானார்

துணிவிருந்தால் உள்ளத் தூய்மையிருந்தால்

துன்பம் நேருமா? எனக் கேட்டார் குழந்தையிடம்—

இன்பமே நேரும் மாமா என்று பிஞ்சும் பூவும்—

இதனால் ‘நேரு மாமா’ வானார்...

மதம் கடவுள் நம்பிக்கை, இவைகளிலே

அவர் கொள்கை தனி எனினும்-பிறர்

மனம் புண்படாமல் நல்வழியில் ஆட்சி செய்தார்-தன்

மரணத்தின் பின்னாலே மதச் சடங்கு வேண்டாமெனத்தக்க

தருணத்தில் உயிலெழுதி உலகிற்கு ஒளி செய்தார்

நடுநிலைத் தன்மை நலமெனக் கொண்டு

நாளிலும் போற்ற நமது பூங்குன்றனார் நவின்ற—