குணநாயகர் நேரு
பகுதி 4 · 4 / 7
புனிதனவன் பிறந்த நாளில் கண்ணீரை அவன்
காலடிக்குக் காணிக்கை யாக்குதலே
என் கடமை” ....
ரோஜாவின் சொற்கேட்டுச் சோர்ந்து போனேன் ... தன்
ராஜாவின் பிரிவாலே வாடுகின்ற அவளை பெண்ணினிப்
பேசாமல் திரும்பி விட்டேன், இன்றென்
மனைவி கூந்தல் மணம் விசாமல் போகட்டுமென்று
மலர் எதுவும் பறிக்காமல் வந்துவிட்டேன்-இன்று
மலர் பறித்தால், அது மாவீரன் நேருவுக்கு மாலை தொடுத்திடவே! .... நம்
மடி பறித்துச் சுதந்திரத்தை அபகரித்த வெள்ளையரின்
கொடி பறித்து விடுதலைக் கொடி பிடித்த கொள்ளை வீரன்
அடி கொடுத்தால் வாங்கிக் கொண்டு
அடக்குமுறை தாங்கிக் கொள்ள
அண்ணல் வகுத்த வழி
அயராதுழைத்த சிங்கம்!
இளமையின் எழிலே
இருட்டுச் சிறையில்
கழித்த தியாகி!
எண்ணெயிட்ட கடுகாய் வெடிக்கும் கோபம்-எனினும்
எண்ணெயிட்டார் விடுதலை வேள்விக்கென்போம்!
பணமலைக்கிடையே பிறந்தார் எனினும் ஏழையை அணைக்கும்
குணமலையாகத் திகழ்ந்தார் என்போம்!
பணியின் விரைவைப் பம்பரம் என்பர்;
பண்டிதர் பணியோ பம்பரம் தோற்கும்—
இடி இடிக்கும் பேச்சில்-இளமை
