உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 9 · 9 / 16

கவிவாணர்

மயில் தோகை விரித்தாற்போல் மனம் படைத்த

நற் கவிஞர்

குயில் பாட்டாய்—கோலக் கிளிப் பேச்சாய்......

எழுத்தாளர் அண்ணா என்று

ஏற்கனவே அவருக்கு இருக்கின்ற மகுடமீது

மாணிக்கம் பதிக்க வந்தார்; வருக—வாழ்க!

ஏடா தம்பி எடுடா பேனா என்றே

வாடா மலராம் எழுத்தாரம் வழங்கலுற்றார்

காடாய்க் கிடந்த கழனியெல்லாம்

கதிராய்க் கண்ட உழவன் போல்—செக்கு

மாடாய்க் கிடந்த எழுத்துலகை,

ஆடாய் மயிலே என்றுரைத்தார்

அண்ணா ஆட்டுவித்தார்

புகழ் நாட்டுவித்தார்

பாட்டு விற்றுப் பிழைக்கின்ற குறிக்கோள் மட்டும்

நாட்டு வளம் செழிப்பதற்குப் போதாதென்று

வாட்டும் துயர் தீர்ப்பதற்கு—தமிழ்

ஏட்டுடனே வந்தவரில் ஒருவரான இப்புலவர்

நயந்துரைப்பார்

நம் அண்ணன் புகழ்;

நாமும் கேட்போம்

எழுத்தாளர் அண்ணா கொத்தமங்கலம் சுப்பு பாடுதல்

மு. க.

ஆளுகின்றார் இன்று தமிழ் அரசை அண்ணா அவர்—எழுத்தை

ஆளுகின்றார்—பேச்சை

ஆளுகின்றார் என்று பேராசிரியர் கல்கி