உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 8 · 8 / 16

மூச்சாலே உரைக்கின்றார் அண்ணன் இன்றளவும்

அவர்

பேச்சாலே புண்பட்டோர் யாருமில்லை;

பண்பட்டோர் பலருண்டு.

சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல் வெல்லல் யார்க்கும் அரிதே என்று

கேட்டார்ப் பிணிக்கும் தகைய வாய்க்

கேளாரும் வேட்ப மொழிந்திருந்து

திறந்தினிது சொல்லி ஞாலம்

விரைந்து தன் தொழில் கேட்கச் செய்தோன்

இவற்றையெலாம்

‘பேச்சாளர் அண்ணா’ என்றே—உயிர்

மூச்சான தமிழ் காக்கச் சிறை சென்ற

(பொன்னி) வளவன் கொடுக்கின்றார்.

(புத்தமுதை) வாரி உண்போம்!

பேச்சாளர் அண்ணா பொன்னி வளவன் பாடுதல்

மு. க.

நாவுக் கரசரது பேராற்றல் பேச்சாற்றல்

பாவுக்கரசர்களின் பாட்டுக்கும் எட்டாது—ஆயினும்

எட்டிப் பிடிப்பதற்கு எல்லைவரை மேற் சென்று

கட்டித் தயிர் போலக் கவிதை யொன்று தந்திட்டார்

இவ்வளவர்;

அவ்வளவில்

அதை நிறுத்தி;

கொத்து மல்லிக் கீரை போல மணக்கின்ற முத்துத்

தமிழ் எழுத்தாளர்

உத்தமர் காந்திக்கு விற்பாட்டு தொகுத்திட்ட சுப்புக்