அண்ணா கவியரங்கம்
பகுதி 7 · 7 / 16
தலைவராம் அண்ணா எனும் தலைப்பினிலே
நிலைபெறுங் காவியத்தைப் பாடுகின்றார்
—அண்ணனுடன்
நெருங்கியவர்,
அவர் தரும் அண்ணன் பாட்டு;
அப்பம் என்போம்
அவல் என்போம்
தேன் என்போம்
தினைமாவென்போம்
தெவிட்டாத பெரு விருந்தென்போம்
(அவருக்கல்ல)
நமக்கெல்லாம்!
ம்! படைப்பீர் அய்யா!
கவிஞர் ஆனந்தம் ‘தலைவர் அண்ணா’ எனப் பாடுதல்
மு. க.
அண்ணா ஒரு தலைவர்
பெருந்தலைவர் என்று
அவனியெல்லாம் அறியும் எனினும்—நாம்
எண்ணாத உவமை யெலாங் கூறிப் புதுப்
பண்ணாகத் தந்து விட்டார்
குயில் பாடும் காவிரியின்
மயிலாடும் துறைவாழ்வார்
மகிழ்ந்தோம் நன்று;
அலை பாடும் கடல் போல
கலை பாடும் மாமல்லபுரம் போல
கவி பாடும் பொன்னி வளவன் வருகின்றார்;
ஏச்சாலே பிழைக்கின்றார் சிலபேர்கள்—அதனைப் பெரு
