உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 10 · 10 / 16

பெர்னாட்ஷா எனும் பட்டம் ஈந்து சென்றார்

அதைப் பொருத்தமென்று சொல்வதற்குப்

பூவிதழ்கள் போலே

பாவிதழ்கள் கொண்டு

பண் ஒன்று தந்தவரைப் பாராட்டிப்

பித்தன் இருக்குமிடம் செல்வோம்.

தலை சுற்றி—நிலை சுற்றும்

பித்தனல்ல இவர்—

தமிழ்ப் பித்தன்...

பிறை சூடும் பித்தன் அறிஞர் அண்ணா

(இஸ்லாமியக் கட்சியுடன்

இணைப் பொன்று கண்டதாலே)

நரை முதிர்ந்த காலத்திலும்—

நுரை பொங்கும் நீர்க்குமிழி வாழ்க்கை என்ற

தத்துவத்தை எதிர்த்து நிற்கும் பேரிளைஞர் அண்ணா

அந்தத் தத்துவ மேதையின்

கற்றறி கொள்கையை

பெற்றிடுவோம் இன்று தமிழ்ப்பித்தரே பாடிடுங்கள்

நன்று

தத்துவ மேதை அண்ணா தமிழ்ப்பித்தன் பாடுதல்

மு. க.

மேதையின் தத்துவம் மேதினி பரவிட

மேதகு கவிதை தந்தவர் வாழ்க—

தடியரசு வாழ்ந்த காலம்

தமிழ் அரசில் கொழிக்கவில்லை—

படியரிசி போடுகின்ற

புது அரசு வந்தவுடன்—தமிழர்