அண்ணா கவியரங்கம்
பகுதி 11 · 11 / 16
அடி அரசு வீழ்த்திடவே;
இந்தி வந்து வாலாட்டி—இது தான்
குடி அரசின் பெருமை என்றால்
அதைக் கேட்டு—தமிழ்க்
கொடி அரசு தூங்காது என்றுரைக்கும்
அண்ணன் புகழ் பாடுதற்கு—கவி
முடியரசன் வந்து விட்டார்—
பாடச் சொல்வோம்.
தாய் மொழிக் காவலர் அண்ணா—முடியரசன் பாடுதல்
மு. க.
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்
தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல்
இனிக்கின்ற
மான் துள்ளும் வேகத்துக் கவியொன்றை
வான் பெய்யும் கோடை மழைபோலப் பொழிந்து
விட்டார்—
முடியரசு;
முன்னாள் தொட்டு இந்நாள்
வரை, இருக்கின்ற நம் கவியரசு
அடுத்து
அன்னையாம் அண்ணா என்ற
தலைப்பினிலே ஏன் பாடுகின்றாரோ;
தெரியவில்லை வேழவேந்தன்—
கொஞ்சு தமிழ் உண்ணக் கொடுத்து—எழிற்
கோலமெலாம் செய்து விட்டு பள்ளிக் கனுப்பி-போர்க்
