உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 12 · 12 / 16

கோலம் பூணுகின்ற போதும் மகிழ்ந்திருந்து;

அஞ்சாதே மகனே—அடலேறு போல நீ வாழ்க—

என்று வாழ்த்தி விட்டு

அஞ்சுகத் தாய் என் அம்மா போன போது—

அருகழைத்து அண்ணாவை—நீ தான்

என் மகனுக் கினி அன்னை என்றாள்;

அந்த அன்னை பற்றிப் பாடவந்தால் புலவரேறு;

என்னை யன்றோ; கண்ணீர்க் கடலில் தள்ளிடுவார்;

இருந்தாலும் ‘அண்ணா அன்னை’ என்றே

தொலை விருந்து ஆற்றிடுவார்—தேற்றிடுவார்

இந்தத் துணிவுடனே கேட்கின்றேன்;

வெற்றி வேந்தன்—வேழ

வேந்தன் பாட்டினையே!

அன்னை அண்ணா வேழவேந்தன் பாடுதல்

மு. க.

தனித்தனி முக்கனி பிழிந்து

வடித் தொன்றாய்க் கூட்டி

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே

தாயன்பை அண்ணாவின் தலைப்பில் வைத்து

தந்திட்டார் என் நண்பர் வேழவேந்தர்—

வெகு நன்று—

ஓர் இரவில் குமரிக் கோட்டம் புகுந்த

பார் புகழும் வேலைக்காரி

சந்திரோதயம் கண்டு பூரித்து—ஆங்கோர்

சந்திர மோகனையே காதலித்து அதனாலே

நீதி தேவன் மயக்கமுற்ற கதையை யெல்லாம்

அண்ணா வரையக் கண்டோம்