உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 13 · 13 / 16

நாடகத்தை எழுதி விட்டால் போதுமா

என்று கேட்டு; என்

வீடகத்துத் தம்பி மாறன்

நடத்துகின்ற முரசொலியில்

ஏடெடுத்து எழுதுகின்ற முத்துலிங்கம்

அண்ணாவின் நடிப்புக்கு உள்ள ஆற்றல்

கண்ணான கலையுலகம் கண்ட காட்சி—

எல்லாமே

வெல்லம் போல்

எழுதிக் காட்ட

இங்கு வந்தார்; இன்பத்

தேனாகப் பாடு தம்பி;

இருக்கின்றோம் நாங்கள் தும்பி

நடிகர் அண்ணா முத்துலிங்கம் பாடுதல்

மு. க.

இனித்த நறு நெய்யளைந்தே இளஞ்சூட்டில் இறக்கி

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடு

தெள்ளமுதாய்

நடித்திட்டார் அண்ணா

அவர் நாடக மொன்றில் (நான்)

கதாநாயகன் வேடமிட்டேன்;

மேட்டுப் பாளையத்தில்—மேன்மையுடன்

கூட்டுவித்த மாநாட்டு மேடையிலே!

சந்திரோதயம் எனும் அந்தச் சமூக ஓவியத்தில்

சழக்கரை வீழ்த்தச் சண்ட மாருத மெனச் சுழலும்

துரை ராஜாய்ப் பாத்திர மேற்றார்—

இறுதிக் காட்சியிலே ஒரு வேடிக்கை என்னாலே