உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 4 · 4 / 16

எனப் போற்றும் அறப்பனுவல்

அளித்திட்டான்—மாந்தரெலாம் களித்திட்டார்.

விண் முட்டும் மலையோரம்—நம்

கண் பட்டும் படாமலும் எழுகின்ற நச்சு மரம் போல

பண்பட்ட தமிழர் வாழ்வில்—முதுகில்

புண்பட்ட கொள்கை யெலாம் மூண்டதந்தோ?

சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்

பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!

அறிவு மணங் கமழுகின்ற ஆலயங்கள் அற்றுப்போய்

ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோவில்கள்

கண்டு விட்டார்

மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள்—தமிழ்

அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்

அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட பெருநிலத்தில்

பிறநெறிகள் பயிர் செய்தார்—பிழை குவித்தார்

மழையற்றுப் போன வயல் போல மாறிற்றுத் தமிழர் மனம்

அழுக்காறு—அவா—வெகுளி—இன்னாச் சொல் நான்குமின்றி

நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்

பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை யென்று

பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்—இன்று

இருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே

தீமையில்லாக் கோல் செந்தமிழர் ஆட்சிக் கோல்

—அது மாறி—

ஆமை நடைக் கோலாய் ஊமைகளை உருக்குலைக்கும்

வாய்மையிலாக் கோலாய் வாய்த்ததிங்கே—முன்பு

வாடினாள் தமிழன்னை—சோகப்பாட்டுப்

பாடினாள் தமிழன்னை—சுடு நெருப்பில்