அணையா விளக்கு அண்ணா
பகுதி 9 · 9 / 13
செம்மொழி எனும் தகுதி தமிழுக்கும் வேண்டுமென்று
நீ விழியால் உரைத்ததை!
வியர்வை சிந்தி சாதிக்க; தமிழகத்தில்
வெகு மக்கள் தயாராயிருந்து வெற்றிகளைப்
படிப்படியாய் பெற்று வருகின்றோம்.
முழு வெற்றி கிடைத்துன் முகம்
முழு நிலவாய் ஒளிரக் காண;
உயிரையும் பணயம் வைப்போம்.......
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்;
அண்ணா; உன் தம்பி இந்தக் கருணாநிதி
தன்னை ஆளாக்கியவரை மறக்க மாட்டான்
ஆயிரம் அடி உயரக் கோபுரக் கலசமாய் அமைந்தாலும்
அந்தக் கோபுரத்தின் அடித்தளம் கோடி கோடித்
தொண்டர்களாம் உடன்பிறப்புக்கள் தான் என்பதை
அவன் உயிர் இருக்கும் வரையில் நினைக்காமல்
இருக்க மாட்டான்.
அதனால் தானே
அன்றொரு நாள் நீ அவனைப் பற்றிப் பேசும்போது
தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும் -
அமைச்சர் பொறுப்பு ஏற்றுக் கொள் என்றாலும்
இரண்டையும் சமமாகக் கருதுபவன் என் தம்பி
கருணாநிதி யென்று சொன்னாய்-
தனிமைச் சிறையில் அவன் அடைபட்டிருக்கும்
பாளையங்கோட்டை சிறைச்சாலை - உனக்கு யாத்திரை ஸ்தலம் என்று
நீ கண்ணீர் பொழிந்ததும்; -
இயக்க வரலாற்றை நான் பாதி எழுதியுள்ளேன்
மற்றொரு பாதியைக் கருணாநிதி தொடர்ந்து எழுதுவான் -
