உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 8 · 8 / 13

“இரக்கமுள்ள அரக்கத்தனம்” என்று ஒரு பெயருமுண்டோ?

தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!

தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்!

தலைவா! நீ உதித்ததால்தான்

தமிழன் தமிழனானான்!

(முதல் நூற்றாண்டு தொடக்கம் உனக்கு - ஆனால்

அறுபதுக்கு முன்பே முடிந்ததே ஆயுள் கணக்கு?

அண்ணனே!

தந்தை பெரியாரின் தளபதி நீ!

விந்தை மனிதர்களால்

விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை

மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!

அறிஞன் நீ!

அறிவாசான் நீ!

வறிஞன் செல்வன் என்று

வரையறுக்கும் வாக்கு பேதம்

வளர்த்தல் தீதென்று சமதர்ம

வழி நின்று உரைத்தவன் நீ!

அண்ணா மறுமலர்ச்சித் திட்டமென்று பெயர் சூட்டி

கண்ணாகக் காரியமாற்றும் உள்ளாட்சி அமைச்சர் அனையர்

பேருழைப்பால்

ஊர்வளம் பல்லாயிரம் பல லட்சமெனப் பெருக்கி நீர்வளம் நிலவளம் உயர்த்தி

பார் வளத்தில் பட்டிக்காடும் பட்டினமும் சமச் சீராய் இருக்கின்ற

காட்சி எனக்

காட்டுதற்கு அண்ணா உன் பெயர் ஊட்டிய உணர்வன்றோ

முழு முதற்காரணம்!

சேலத்து இரும்புக்கும், சேது சமுத்திர திட்டத்துக்கும்