உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 6 · 6 / 13

அண்ணா நீ தான் எமக்கு ஆற்றலை வழங்கினாய்.

அய்யன் தொல்காப்பியன் அறிவு பற்றி

ஆராயப் புகுந்து; ஓரறிவு உயிரினம் முதலான ஆறறிவு மனிதன் வரை

அளந்து காட்டினான்; அய்யா வழியே நின்று நானும் அதைப்

பிளந்து காட்டினேன் - ஆம்;

உடலினால் அறியக் கூடிய ஓரறிவு உயிரினமும்;

உடல், வாய், இரண்டினாலும் அறியக் கூடிய ஈரறிவு உயிரினமும்;

உடல், வாய், மூக்கு, மூன்றினால் அறியக் கூடிய மூவறிவு உயிர் இனமும்;

உடல், வாய், மூக்கு, கண்களால் அறியக் கூடிய நாலறிவு உயிர் இனமும்;

உடல், வாய், மூக்கு, கண், செவிகளால் அறியக்கூடிய

ஐயறிவு உயிரினமும்;

மனத்தினாலும் அறியக் கூடியதே ஆறாம் அறிவென்னும்

பகுத்தறிவாகும்.

மக்கள் ஆறறிவுடையாராக இருப்பதற்கும் - அந்த ஆறில் ஒன்றிரண்டு

குறைவதற்கும் இலக்கணம்

பொறுப்பல்ல என்று நான் தொல்காப்பியப் பூங்காவில் குறிப்பிட்டிருப்பது

பகுத்தறிவுக்கும் பொருந்தும் என்பதால்; அதனைப்

பகுத்தறிவாளர் மட்டுமே பகுத்துணர முடியுமென்பேன்!

இரக்கமற்ற அரக்கன் யார் என்று

கம்பனையே நீதி மன்றத்தில் நிறுத்தி

கணைகள் பல தொடுத்து; இராமன்,

வாலியை மறைந்திருந்து கொன்ற போது

வடிந்ததோ இரக்கம் என்று; பகுத்தறிவால் கேள்வி கேட்டு,

பண்பாக வளைத்துப் போட்டாயே -

பகைவர் வீசிய வஞ்சக வலையை அறுத்துப் போட்டாயே;

மோகம் கொண்டேன் உம்மிடம் என்று சொன்ன

முத்துநகையாம் இராவணனின் தங்கை சூர்ப்பனகையின்