அணையா விளக்கு அண்ணா
பகுதி 4 · 4 / 13
(முதல் நூற்றாண்டு தொடக்கம் உனக்கு - ஆனால்
அறுபதுக்கு முன்பே முடிந்ததே ஆயுள் கணக்கு?
காந்தம் உன் விழியில்!
சாந்தம் உன் மொழியில்!
வீரம் உன் செயலில்!
விவேகம் உன் முறையில்!
பாசம் உன் உடன்பிறப்பு!
பரிவு அதன் மறுபதிப்பு!
இதயமோ எதையும் தாங்கும்!
புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!
(முதல் நூற்றாண்டு தொடக்கம் உனக்கு - ஆனால்
அறுபதுக்கு முன்பே முடிந்ததே ஆயுள் கணக்கு?
அண்ணனே!
அறிவியக்கமாம் நம் கழகம்; ஆட்சி அமைக்கும் என்றாய்!
அண்ணன் சொல் திண்ணமாய்ப் பலிக்குமென்றார்;
பலித்தது; தமிழர்க்கு பழமெனச் சுவைத்தது!
நீ வருவதற்கு முன்பு
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப் பின்தான்
வகையாகத் தமிழன் முழு வரலாற்றை உணர்ந்தான்!
வருஷங்கள்கூட ஆண்டுகளாக மாறின - இன்று
தை முதல் நாளே தமிழர் திருநாள் ஆயிற்று!
ஆற்றோரம் எனும் தலைப்பில்
அண்ணாமலைப் பல்கலையில் நீ,
ஆற்றிய உரைக்குப் பின் தானே - உனைத்
தூற்றியோரும் தொழுது பின்னால் வரத் தொடங்கினார்.
ஆரிய திராவிட இன வேறுபாடு குறித்து
