உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 12 · 12 / 13

வேண்டுமென்றேன் -அதற்குள்

மாறன் அதை முரசொலியில் அண்ணாவின் வாக்குறுதி யென எழுதி விட்டான்

மலையைப் புரட்டும் காரியமாய் அன்று நான் கருதியதை; இன்று

மாநில மக்களின் மனம் களிக்க என் தம்பி கருணாநிதி

கிலோ அரிசி கிடைக்கும் ஒரு ரூபாய்க்கு என அறிவித்து;

என் கல்லறையில் கணக்கின்றி மலர் மாரி பொழிகின்றான் - நானும்

அவனை மகிழ்ச்சியாக வாரி அணைத்து வாழ்த்துகின்றேன்” -

இது கண்டு -

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு.....

வாய்மையற்ற வன்கணாளர் வசை பாடுகின்றார் அதை

இசையாக ஆக்கிக் கொள்வீர் என் தம்பியரே என அறிவுரை கூறுகின்ற

காஞ்சிப் புத்தரே; உன் காலடியில் கழகம் சரணம் கச்சாமி!

★ ★ ★

முடிவுரை

அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தில் - இந்திய

அரசியல் நிலவரத்தில் அணுவளவு கவனம் செலுத்தலாமா?

ஆம் - அணுவில் தானே அத்தனை பிரச்சினையும் ஆரம்பித்தது -

அனைத்து நாடுகளும் கவனித்த அந்தப் பிரச்சினையில்,

இடதுசாரிகளுக்கும் இங்குள்ள

இந்தியப் பேரரசின் ஆட்சியாளருக்கும்

இடையில் நான் நடுநிலை கொண்டு;

மதச் சார்பற்ற மனித நேய ஆட்சிதான்

மக்களைப் பாதுகாக்கும் வாய்மையுடையது எனும்

மனமுடையோனாய்த் தான் செயலாற்றினேன்!

மறுப்புரைப்போர் வெறுப்புரைப்போர்; என

இரு சாரார் இரு முனையில் இருந்தபோதும்

எதிர்கால இந்தியாவை எண்ணிப் பார்த்தே