உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 11 · 11 / 13

அங்கத்தில் துடிப்பின்றிக் கிடக்கின்றானா?

அய்யோ பாவம்;

அவனுக்குச்

சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள்!

தங்கத்தில் சிலையொன்று அமைத்திடுங்கள் -

உளி இரண்டை உதட்டின் மேல் வைத்தாற் போல்

ஒளி மிகுந்த பாண்டியர்க்கு மீசையுண்டு

அளி வந்ததில்லையென்று இன முழக்கம்

செய்வது போல் -காதின்

வெளி வரையில் படர்ந்திருக்கும் சோழன் மீசை!

களிறாட்டுத் துதிக்கை போன்று

கண்நோக்கி வளர்ந்திருக்கும் - சற்று

நெளிகாட்டும் நீளமீசை சேரன் மீசை!

அன்றந்த மீசையெல்லாம் துடித்ததனால் - பகைக்

குன்றங்கள் பொடியான கதைகள் உண்டு!

இன்றந்த வீரம் வேண்டும் மிகவும் வேண்டும்!

இன் செயலில் வலிவு தேக்கி

வன் செயல்கள் அறவே போக்கி,

முன்பிருந்த தமிழர்களின் உணர்வைப் பெறுக!

தன்மான உணர்வைப் பெறுக!

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண

எப்போதும் தவம் இருக்கும் எங்கள் அண்ணனே!

எழுதியாய் தேர்தல் நேரத்தில் அறிக்கையாக -

மலிவான விலையில் மக்களுக்கு அரிசி தர வேண்டுமென்று!

அதனை

உன் மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால்

“மக்களுக்குப் படியரிசி ஒரு ரூபாய்க்குப் போட