உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

ஆந்தையும் அரசனும்!

பகுதி 6 · 6 / 8

உண்மையிது உணர்க!” என்றே உருகிநின்றார்

கருகுகின்ற மனத்துடனே காவலனும்—கண்ணில்

அருவியென நீர் பொழிந்து களம்பிரிந்தான்.

* *

மானம் வரின் சாதல் நன்றாம்—எனும்

மனம் படைத்த மரபில் வந்தோன்

ஊனம் விளைந்தது—வீரம் அழிந்தது—

வானம் பழித்தது! இனி வாழ்தல் நன்றா?

என

சோகம் கப்பிய கேள்வி எழுப்பி,

வேகம் குறைத்து வடக்கே சென்றான்.

* *

வடக்கிருத்தல் எனும் ஒரு வழக்கம்—உயிர்

வறுத்திட மன்னர் கைக்கொளும் பழக்கம்.

உண்ணா நோன்பால் வாடி மெலிந்து,

மண்மேல் சடலம் வீழ்ந்திடும் வரையில்

இன்பம் அதுவென இருந்தே தீர்வர்—

இதுதான் வடக்கே இருத்தல் என்பர்.

* *

கோப்பெருஞ் சோழனது வடக்கிருத்தல்

மாப்புகழ்கொண்டிலங்கு தமிழகத்தில்

மூப்பிலார் முதியோர் மற்றும் மொட்டனையர்—

உள்ளமெலாம்

காப்பிலா தொழிந்ததே நாடு என்ற கவலை மூட்டும்.

நட்பாலே பிணைந்து விட்ட நாவலர்கள்

அப்பாலே போகாமல் அருகிருந்தார்.

முப்பாலும் உணர்ந்திட்ட பெருவேந்தன்—முடிவு