உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

ஆந்தையும் அரசனும்!

பகுதி 5 · 5 / 8

கொண்டோடும் அறிவுரையை!

திண்டோள்கள் விம்முகின்ற போர்மறவர்

கொண்டாடும் கொலை விழாவைத் தடுக்காதீர்!”

எனக்கூறி மறுத்துவிட்டார்

மகன் தந்தை அன்புதனை அறுத்துவிட்டார்.

இருபடையும் மோதிக் கொள்ளப்

பெரு முரசம் ஆர்த்த தங்கே!

உறுபகையும் ஓங்கிற்று;

செருமுனையும் ஏங்கிற்று!

இறுதிவரை அமைதிக்கு முயற்சிக்க

உறுதியுடன் ஒருபுலவர் புறப்பட்டார்.

போர் முனையின் படைவரிசை கீறிச் சென்று

புல்லாற்றூர் எயிற்றியனார் புகுந்துவிட்டார்

நகுதற் பொருட்டன்று நட்டல்

மேற்சென்று இடித்தல் பொருட் டெனும்

தமிழ்க் குரலை மெய்ப்பிக்கத்

தலைநிமிர்த்தித் தார்வேந்தன் பக்கல் சேர்ந்தார்.

“இமிழ் கடல் வேலித் தமிழ் நிலந்தன்னில்

சிமிழ்போல் மைந்தர் சிரங்கள் வீழ்த்திக்

கமழ்ந்திடும் வெற்றி, களிப்பைத் தருமோ?

கொற்றவனே! நீ பெற்றபிள்ளை செத்தபின்னர்

கோட்டை அரண் வாழ்வதற்கும் கோழியூர்

ஆள்வதற்கும்

உற்றவர் தான் யார் என்று எண்ணுகின்றாய்?

உன்மைந்தர் வென்றாலும் உனைச் சூழும் அவமானம்!

உன்மைந்தர் மாண்டாலும் உறையூரை

ஆள்வதற்குப் பிள்ளையில்லை