உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

ஆந்தையும் அரசனும்!

பகுதி 4 · 4 / 8

மற்றோர் சொல்ல சோழனும் கேட்டு,

உற்றார் உறவை மிஞ்சிடும் வண்ணம்

வற்றா அன்பைப் பொழிந்தான் அவர் மேல்

கவியரசன் கண்டதில்லைப் புவியரசை

புவியரசன் கண்டதில்லை கவியரசை

காணாமலே ஈரரசும் காதல் கொண்டார்

கடைசிவரை அப்படியே காலம்சென்றார்.

* *

கொழிக்கின்ற கோழியூரின் சிறப்பையெல்லாம்

பழிக்கின்ற பான்மையிலே நிகழ்ச்சியொன்று—

அறிவை

அழிக்கின்ற தீயவரின் அனலுரையால்—கண்கள்

விழிக்கின்ற திறனற்றார் அரசமைந்தர்.

துளிர்க்கின்ற போதெல்லாம் தோள்மீதும் மார்மீதும்

தளிர்க் கரத்தால் சுகமீந்து வளர்த்திட்ட

ஒளிக்குன்றாம் தந்தை மேல் படையெடுத்தார்.

தன் படைப்பே தன்னுயிரை அழிப்பதற்கு

முனைதல் கண்டான்

புண் படைத்த நெஞ்சத்தோடு போர்வாளைத்

தூக்கிக் கொண்டான்.

கண்படைத்த குற்றமோ இக்காட்சி காணல்—சோழ

மண்படைத்த பெரும்பேறு போயிற்றென்று

தண்மதியின் உளங்கொண்ட சான்றோரெல்லாம்—

போர்ப்

பண்பாட வேண்டாமென இருதரப்பும் இறைஞ்சி

நின்றார்.

“வண்டாடும் பூப்போன்ற மாதரிடம்