ஆந்தையும் அரசனும்!
பகுதி 2 · 2 / 8
பொன்தமிழ் சிந்தும் புலவர் நண்பன்
யாப்பும் அணியும் பிறழாக் கவிஞன்
கோப்பெருஞ்சோழப் பெருந்தமிழ் அறிஞன்.
பூதநாதர், புல்லாற்றூர் எயிற்றியனார்
புகழார்ந்த நத்தத்தன், பொத்தியார்,
பூவரசு போற்றுகின்ற நாவரசு பிசிராந்தை
இந்தப்
பொங்கு மொழிப் புலவரெலாம்
தங்கு மெழில் மண்டபந்தான்
தார் வேந்தன் நெஞ்சகமாம்!
★ ★
தேனில் வளர்ந்து தேனில் மலர்ந்து
தேனில் நனைந்து தேனைப் பிழிற்றும்
தேன் பூ போலே......
தமிழ் இல் பிறந்து தமிழால் வளர்ந்து
தமிழ் இழை கொண்டு தமிழ் உடை தந்த
தக்கோர் வாழ்ந்தனர் தணியாநட்புடன்!
கருவூர் சதுக்கப் பூதநாதர்
தருநிழல் போன்ற தமிழ்மொழியதனை
அரும் பொருள் கொண்டு அள்ளித்தந்தார்
வரும் பொருள் உரைக்கும் அமைச்சருடையோன்
நறுமண மிக்க மலரிற் சேர்ந்த நாரே ஆவேன்
நட்பால் என்னைப்பிணைப்பீர் என்றே அணைத்துக்
கொண்டான்
பூதநாதர் பூரிப் படைந்தார்!
பூ மிதக்கும் அருவிபோலப்
புறப்பாட்டுப் பாடுகின்ற
