உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

ஆந்தையும் அரசனும்!

பகுதி 1 · 1 / 8

மு.கருணாநிதி

தாழியில் உடலைப் புதைக்கும் நாளில்

ஆழி சூழ் தென்னக மண்ணின் மீது

கோழியூர் என்பது உறையூர் பெயராம்

வாழிய செந்தமிழ் என்றே மன்னர்

வாளை உருவிக் காத்தனர் முன்னே—

ஓலையில் இலக்கியம் யாத்தனர் பின்னே!

சோழியர் குடுமி ஆடுதல் போலே

மேழிச் செல்வர் வீட்டுக்கோழி

ஆட்டும் தலையை! வாட்டும் பகையை!

பூனைக்குப் பகை நாய் என்போம்

புலிக்குப் பகை வேடரென்போம்

புறாப்பகை வல்லூ றென்போம்

யானைக்குப் பகை கோழியென்று படித்ததுண்டோ?

உறையூரில் ஒருகோழி யானையிடம்

உறுபகையை முடித்த தென்று

வடித்ததுண்டு இலக்கியமும்

தடித்த துண்டுக் கரும்பு போல்

இனித்ததுண்டு அக்கதையும்!

உறைந்தது மண்ணெலாம் வீரம் என்பதால்

உறையூர் என்றே உரைத்தது மன்பதை!

வாள் இருக்குமிடம் ஓர் உறையென வழங்கும்.

வாளொத்தவீரர் இருக்குமிடம் உறையூரென—

முழங்கும்.

★ ★

அந்நகர் ஆண்ட ஆற்றல் மறவன்