உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 9 · 9 / 38

உண்மைதான் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிகிறதே கண்ணகி! நீ கவலைப்படாதே யம்மா! கோவலனே உன் மாமா எப்படியும் அழைத்து வந்து விடுவார்!

பார்த்தீர்களா! அழுதழுது முகமெல்லாம் வீங்கியிருக்கிறது என் பெண்ணுக்கு! இரண்டு கண்ணும் எப்படிச் சிவந்திருக்கிறது பாருங்கள்! கண்ணகி; இந்தக் கோலத்தில் உன்னைப் பார்க்கவா தவங்கிடந்து உன்னைப் பெற்றேன்....

[அழுகிறாள்!]

அம்மா!...

ம்! இதோ போகிறேன்; இரண்டு சொன்று பார்த்துவிட்டு வருகிறேன்...

[உள்ளிருந்து சிரித்துக்கொண்டே வந்தவாறு]

அப்பா! எங்கேயப்பா போகிறீர்கள்?

யார்! நீயா?...கோவலா! நீ இங்கே தானு இருக்கிறாய்?

ஏன் வேறு எங்கே போகவேண்டும்?

[கண்ணகியிடம்]

என்னம்மா இது; அப்படியானால் நான் கேள்விப்பட்டதெல்லாம் பொய்தானு?

கேள்விப்பட்டது உண்மைதான், ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னுக்கு மால் வாங்கிய வரையில்! கிளியைக் கிழவனிடமிருந்து காப்பாற்றிய படலம், அவ்வளவு தான்! அதற்கு மேல் நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் அது ஏதோ கோள் சொல்லும் கோட்டான்களின் வேலை!...

கண்ணகி!

நீங்கள் எல்லோருந்தான் என்னைப் பேச விடாமல் வளைத்து விட்டீர்களே; வருத்தம் தெரிவிக்க!...

அப்படியானு....

காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இல்லறம் இனிது நடைபெறுகிறது மாமா! கடைசி வரையில் கண்ணகி கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கடமை எனக்கிருக்கிறது!...

அவசரப்பட்டு விட்டோம் கோவலா!...இந்த நல்ல மகனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன பாக்கியம் செய்தானோ என்று பார் முழுதும் என்னைப் பாராட்டிப் புகழும். அது போதும் மகனே, எனக்கு!

[தழுவிக் கொள்கிறார் கோவலனை]

கண்ணகி! இப்படியொரு நல்ல குடும்பத்திற்கு மருமகளாகும் பாக்கியம் உன்னைத் தவிர வேறு யாருக்கம்மா கிடைக்கும்?

[கண்ணகி ஆனந்தக் கண்ணீர்]

[கண்ணகி கையில் மாலையுடன்! தீபம் எரிந்து கொண்டிருக்கிறது;

மாலையுடன் பாடிக் கொண்டே, மாலையைக் கோவலன் கழுத்தில் அணிவித்து, அவன் கால்களில் கரந்தொட்டு வணங்குகிறாள்.

கோவலன் அவளைத் தூக்கி நிறுத்தியவாறு,

“பெய்யெனப் பெய்யும் மழையே! கொழுநனைத் தொழுதெழும் நேரிழையே!”

என்ற பொருளில் பாடுகிறான்...இருவரும் மெய்ம்மறந்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

பாட்டு முடிகிறது...

கோவலன் தனியே சென்று வருத்தமாக அமருகிறான். கண்ணகி அருகே சென்று]

என்னத்தான்...ஏன்?

ஊடல்!...

ஊடலா?...அப்படியென்றுல்?...

சரிதான் போ...ஊடல் என்றுல் தெரியாதா?...திருக்குறள் இன்பத்துப் பாலிலேயே தில சிறந்தது அது தானே...ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்வது; பிறகு சமாதானமாகி, சந்தோஷமாக இருப்பது.

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை