சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 10 · 10 / 38
வேண்டாம், வேண்டாம்; கோபிப்பானேன்; பிறகு சமாதானமாவானேன்?
சமாதானம் ஆவதற்காகவே சண்டை போட்டுக் கொள்வதுதான் கண்ணகி; ஊடல்!...
அப்படியானால் இப்போது ஊடல் ஆரம்பமா?...
இது ஒன்றும் ஊடல் இல்ல; கண்ணகி! உனக்குப் பிடிக்காத செய்தியொன்று சொல்லப் போகிறேன்.
என்னத்தான் ?...
உன்னைப் பிரிந்து செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...
ஆ!
ஆமாம்; நாளைக் காலையில் ரோமாபுரிப் பயணம்!
மறுபடியும் வெளிநாட்டுக்கா?. அத்தான்; விளையாடுகிறீர்களா?
இல்ல கண்ணகி; ஐம்பதாயிரம் முத்துக்கள் அகஸ்டஸ் சீமான் அரண்மனைக்குத் தேவையாம்...அதை ஏற்றிச் செல்ல வேண்டும்...நானே நேரில்!...
கடல் அலையில் கட்டுமரம் போல் தவிப்பதற்கோ பிறந்தேன், இல்ல; இந்தப் பயணத்தைத் தடுப்பதற்குத் துணிந்தேன்.
தடை வேண்டாம்; தணல் வேண்டாம் உன் விழியில்! புனல் கடந்து ஒளி முத்து விற்று வந்தால், மடை திறந்த வெள்ளம் போல் பொற்காசு குவியும், தமிழர் வளத்தைத் தரணி அறியும். விடை கொடு பாவாய் - அத்துடன் விருந்தளிக்கும் உன் இதழ்க்கடையை இங்குக் கொடு!
முத்துச் சுமை ஏற்றிக் கத்து கடல் கிழிச் செல்லையிலே, குத்து விளக்கொன்றை இங்குச் செத்து மடிய விட்டுச் செல்கின்றேரும்... என நினைப்பீரா அத்தான்?...
நினைக்கமாட்டேன் கண்ணே; உனை மறந்தாலன்றோ நினைப்பதற்கு! கண்ணகி! மூச்சு வாங்குவதற்கும் விடுவதற்கும் நினைப்பை வைத்துக் கொள்வதில்லை! என் உயிர் மூச்சே! ஏதேதோ எண்ணுதே! நீயின்றி நானில்லை! நிலவின்றி வானில்லை!
விண் மீன்கள் படையெடுத்தால்?
புலால் உண்ணேன்...
ரோம் நாடு - அழகிகள் வாழ் தேன் கூடாமே!...
அங்கு நான் ஓர் முடவனுயிருப்பேன். கொம்புத்தேன் தமிழகத்தில் உண்டென்று உன் கொய்யா இதழ் நினைத்து உறங்குவேன். கனவுக் கற்பனையில் உன் எழிலே உண்ணுவேன்.
உறங்குவீர்கள் நீங்கள்; அதனால் என்னைக் கனவில் உண்ணுவீர்கள் நீங்கள். கனவு தன்னில் உம்மைக் காணுகின்ற பாக்கியமும் எனக்குக் கிட்டாதே, அத்தான்!...
ஏன் கண்ணகி?...
தூங்கினால் அல்லவா கனவு காண? நீங்களில்லையேல் என் விழிகளுக்கு உறக்கமேது?
வருந்தாதே கண்ணகி... விடை கொடு; இந்த ஒருமுறை உன்னைப் பிரிந்து செல்வ! பிறகு என்றென்றும் அணுப்பொழுதும் உனைப் பிரியேன்...எங்கே; சிப்பியிலே விழியாத சிரிப்பு முத்தைக் காட்டிடுவாய்; என் சிந்தையிலே உறவாடும் செந்தமிழின் நலம் பாடித் திரும்புகிறேன்.
பிரிவு தரும் வேதனையால், பலாப்பழத்தின் தோல்மீது படுத்ததுபோல், புரள்வேன் அத்தான் பஞ்சணையில்!...
பிரிந்தவர் கூடி விட்டால், பழத்துக்குள் இருக்கின்ற சுளைபோலச் சுவையேறும் செந்தமிழே!...
என்னதான் சொன்னாலும்; என்னை எடுத்துப் பிரிவென்னும் தணல் மீது போடுதற்கே முயல்கின்றீர்!
[அழுகிறாள்]
கொல்லாமற் கொல்லாதீர் கண்ணுளா!...
கண்முத்துச் சிந்தாதே கண்ணகி! எண்ணிரண்டு பதினாறு கிழமை; அதன் பின்னர் அகல்வதில்லே உன்னைவிட்டு என்றுமே!...
மெய்தானு அத்தான்...
பிரியவில்லை...பிரியவில்லை...பிறகென்றும் பிரியவில்லை...
பிரியவில்லையா?...பிரியமில்லையா?...
கண்ணகி! ஏன் உனக்கு இப்படிச் சந்தேகம்?...
