சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 11 · 11 / 38
அத்தான்!...
[கண்ணீர் வடிக்கிறாள். துடைக்கிறான்...]
கண்ணகி!...
[தெருக் கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது...இருவரும் கவனித்தல்]
நீ இரு! நான் பார்த்து வருகிறேன்.
[பள்ளியறை வாயிலைக் கடந்து, கூடத்தைத் தாண்டி, தெருக் கதவைத் திறக்கிறான் கோவலன். வசந்தமாலை வணங்கி நிற்கிறாள்]
யார்? மறுபடியும் வந்து விட்டாயா?
மன்னிக்க வேண்டும்! மாதவி உயிரையே அர்ப்பணிக்கத் தயாராகி விட்டாள்!
நீ எந்த வகையில் கிணை தொடுத்தாலும் பதில் ஒன்றேதான். மாதவியை மணப்பதற்காக நான் மாலையை வாங்கவில்லை.
பிறகு? மாதவியைக் கொள்வதற்காக மாலையை வாங்கினீர்களா?
என்பது தவறுதான்! அவளை அந்தக் கிரேக்கக்கிழவனிடமே ஒப்படைத்திருக்க வேண்டும்.
மாதவி கேட்கிறாள், அழகில் குற்றமா, ஆடலில் குற்றமா, எதில் குற்றம் என் வெறுக்கிறீர் என்று?
யார் சொன்னது அப்படி? அவள் அழகுக்கும் ஆடலுக்கும் பொருத்தமான ஆண் மகன் இன்னும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை!
[கோவலன் தர்ம சங்கடத்தில் துடிக்கிறான். கண்ணகி வந்தவாறு...]
அத்தான்!
மாதவியை மணக்க வேண்டுமாம் நான்...தூது வந்திருக்கிறார்கள்; முடியாது என்று கூறிவிட்டேன்!...
முடியாது என்பதையாவது நேரில் வந்து கூறி விடுங்கள்.
நீங்களே போய் நிலைமையை விளக்கிக் கூறினால் அவள் மனத்துக்கும் ஒரு சாந்தி ஏற்படும் அல்லவா?....
கண்ணகி!...
சீக்கிரம் திரும்பி விடுங்கள்! இதோ...
[என்று மேலங்கியை எடுத்து வந்து தருகிறாள்...
அவன் காலணியைக் கொண்டு வந்து காலில் மாட்டி விடுகிறாள்.]
நான் போகவே தேவையில்லை; உன் நூல்தான் எல்லாம்...
மாதவி நல்ல பெண்! அவள் மனமும் நோகக் கூடாதல்லவா?... “நானே ஒரு நல்ல மணமகனைப் பார்த்து, திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறிவிட்டு, வாருங்கள்!
சரி கண்ணகி; வரட்டுமா?
வரும் வரையில் நான் இங்கேயே நின்று கொண்டிருப்பேன்; சீக்கிரம் திரும்பி விடுங்கள்...
சரி! வருகிறேன்...
சிறிது நேரம் பிரிவதற்கே முடியவில்லை. ...நாளை ரோமாபுரிக்கு எப்படி வழியனுப்பப் போகிறேன்!...
வரட்டுமா?...
அத்தான்!...
கண்ணகி!...
[பிரிகிறார்கள்]
