உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 12 · 12 / 38

[பல்லக்கு போன்ற அழகிய வேலைப் பாடமைந்த வண்டியில் கோவலன் ஏறிக்கொள்ளவே, வண்டி போகிறது...கண்ணகி பார்த்தவாறு நிற்கிறாள்...]

[கோவலன் வருகைக்காக இல்லம் அலங்கரிக்கப்படுகிறது, அவசர அவசரமாக....]

நடனங்களில் கோவலன் மயங்கி அமர்ந்திருக்கிறான்.

ஆடலழகிகள் ஒவ்வொருவராகக் குறைந்து இறுதியில் மாதவி மட்டுமே ஆடிக் கொண்டிருக்கிறாள்.

ஆடுகிறாள்.

ஆடுகிறாள்.

ஆடிக்கொண்டே இருக்கிறாள். விரகதாபம், காதலில் ஏமாற்றம், கோவலன் தன்னை ஏற்றுக் கொள்ளாததால் ஏற்பட்ட விரக்தி, மிதமிஞ்சிய சோகம் அனைத்தும் கலந்த ஆட்டம் ஆடுகிறாள்.

கோவலன் திகைப்பு.

அவள் மேலங்கியின் நுனி பட்டு அங்குள்ள கல்தூண்கள் கூட மத்தள ஓசை கிளப்புகின்றன. பலகணியில் படர்ந்திருக்கும் பச்சைக் கொடியில் அவள் விரல் படுகிறது. அதிலே யாழ் ஓசை-வீணையின் நாதம் அதிர்கிறது! விரகதாபத்தால் கை வளை கழன்று கீழே “தொப்” என்று விழுகிறது.

அது வும் இசையாய் ஒலிக்கிறது.

உணர்ச்சிகள் அனைத்தும் பீறிட்டுக் கிளம்ப ஆடிக்கொண்டே இருக்கிறாள். சோகம் உச்ச கட்டம் அடைகிறது. அப்பொழுதும் ஆடுகிறாள்.

கோவலன் இதயம் படபடக்கிறது.

அந்த நடனக் கூட்டத்தில் ஒரே அமைதி.

அந்த அமைதியிலே கொடி போலத் துவள்கிறாள் மாதவி.

தணலில் விழுந்த புழு, துடித்து அடங்கி இறுதியில் மெதுவாக அசையுமல்லவா, உயிர் விடுவதற்கு; அதுபோல நெளிகிறாள்.

ஆட்டம் நிற்கவில்லை...இதுபோல ஆடியதே இல்லை.

“தடால்!”

மாதவி பேச்சு மூச்சற்ற நிலையில் தரையில் விழுந்து விட்டாள். கோவலன் “மாதவி” எனக் கதறி அவளைப் போய்த் தூக்குகிறான். அருகேயுள்ள தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்கிறான்.

பக்கத்தில் உள்ள பழத்தை அவசரமாகப் பிழிந்து பழச்சாறு தருகிறான், அவளுக்கு.

அவள் தலையைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு]

மாதவி! மாதவி!!

[சிறிது நேரம் கழித்துக் கண் விழித்த மாதவி தாரை தாரையாகக் கண்ணீர் விடுகிறாள்]

மாதவி...மாதவி... அழாதே! ஏன் இப்படி நடனமாட வேண்டும்?

பிரபு! இதுதானே என் கடைசி ஆட்டம்!...

ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?...

என் கலைத் திறமை முழுவதையும் யாரிடம் காட்ட வேண்டுமோ அவரிடம் காட்டி விட்டுக் கடைசியாகக் கண்ணை மூடவே இந்தத் திட்டம் தயாரித்தேன் பிரபு!...

உன் அவசர முடிவால் நாடு போற்றும் நாட்டியக் கலையே அழிந்து விடும்!...

உற்சாகமான உள்ளத்திலேதானே கலை உதயமாக முடியும்!

யார் சொன்னது? சோகப் பெருவெள்ளத்திலும் கலை பெண்ணும் அலை எழுகிறது மாதவி!...

மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் தமிழகத்தில் மாதவி மட்டும் ஏன் சோகக் கலையை வளர்க்க வேண்டும்; மக்களின் துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்?

அப்படியென்ன உனக்குத் துன்பம் வந்து விட்டது?...

அப்படியானால்...என் வாழ்வில் சோகக் கறை நீங்கி விட்டதா? சோலைக் குயில் கூவி விட்டதா?...காலப் பறவை என் வாழ்வின் விடிவுக்கு வாழ்த்து கீதம் பாடி விட்டதா? சொல்லுங்கள் பிரபு!

மாதவி!...

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை