உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 13 · 13 / 38

பொன் வேண்டேன்...பொருள் வேண்டேன்...மண்ணுளும் மறவேந்தர் தருகின்ற புகழ் வேண்டேன். எந்நாளும் கண்ணுளன் நீர் அருகிருந்தால்...ஊன் வேண்டேன், உயிர் வேண்டேன், தேன் வேண்டேன், தேவர் வாழ் உலகும் வேண்டேன்.

மாதவி!...

படர்கின்றேன் உம்மீது கொடிபோல, தொடர்கின்றேன் அத்தானின் அடிச் சுவட்டை! சுடர் தந்தேன் வாழ்வுக்கு என ஒரு வார்த்தை கூறுங்கள் கண்ணு!

மாதவி!...

“மயக்குகின்ற மாதர் வழி வந்தவள் நீ” என மனக் கலக்கம் கொள்ளுகின்றீர்.... உண்மைதானே?..

இல்ல கண்ணே!...

ஆ!...

மாதவி!...

[மாதவி அவன் மடியில் மயங்கிச் சாய்கிறாள்]

[கண்ணகி தெருக்கதவின் ஓரம் நின்றவாறு, கோவலன் வரவு பார்த்திருக்கிறாள்.

பல்லக்கு வண்டி மெல்ல அசைந்தாடி வருகிறது.

ஆவலுடன் பார்க்கிறாள். வண்டிக்காரன் மட்டுமே இறங்கி வருகிறான்......]

அவர் எங்கே ?

அவர் வரவில்லை!

ஆ !...

ரோமாபுரிப் பயணத்தைக் கூட ஒத்தி வைத்து விட்டாராம்.

[கண்ணகி அசைவற்று நிற்கிறாள்......... வண்டிக்காரன் போய்விடுகிறான். அப்போது கண்ணகியின் தோழி தேவந்தி வருகிறாள்.

கண்ணகி அசைவற்று நிற்பதைப் பார்த்து வியந்து]

கண்ணகி!......

[கண்ணகி மெதுவாகத் திரும்பி தேவந்தியைப் பார்க்கிறாள்.]

ஏன் ......என்ன நடந்தது ?

ஒன்றுமில்ல தேவந்தி!......

பிறகேன் அழுகிறே?......

அவர் எங்கே, உன் புருஷன் ?...

நாளைப் பயணத்திற்காக ஏற்பாடுகள் செய்யப் போயிருக்கிறார்....

ஓகோ ... நாளைப் பயணமா ? அந்தப் பிரிவை நினைத்துத்தான் இப்பவே அழுகிறாயாக்கும்! அடி அசடு!... வா உள்ளே !

[உள்ளே அழைத்துச் சென்று]

ஆமாம்........ அந்த மாதவி உன் புருஷனுக்கு ஆள்மேலே ஆள் விட்டாளே; அது என்னடி ஆச்சு கண்ணகி?....

(இருபொருளில்) கண்ணகி : தோல்வியில் முடிந்தது!...

அதானே! அதானே!... சீதையை விட்டு ராமன் பிரிவானே?.... கண்ணகியை விட்டுக் கோவலன் பிரிவானே? இடையிலே அந்த மாதவி ஒருத்தி, சூர்ப்பனகை மாதிரி வந்து அவமானப்பட்டாளே; ஏன்?....

மாதவியை இகழாதே; தேவந்தி! அவள் கொடுத்து வைத்தவள்; பாக்கியசாலி.

[பள்ளியறையில்......

மாதவி மால் தொடுத்துக்கொண்டிருக்கிறாள்...கோவலன் அருகே அமர்ந்து அவள் விரல்களின் அசைவையே பார்த்துக்கொண்டிருக்கிறான்......

மாதவி, அவனைப் பார்த்து...]

என்ன, விழி அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

உன் விரல் அசைவைத்தான் !...

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை