சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 14 · 14 / 38
காந்தள் விரல்களிலே நாட்டியம் தன் கலையழகைக் காட்டுகின்ற விந்தையைத் தான் சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.... மாதவி! நாட்டியக் கலைக்கென்றே படைக்கப் பெற்றவள் நீ !......
இல்ல !... உங்களுக்காகவே படைக்கப்பட்டவள் நான் !......
தவறு — தவறு... நீ படைக்கப்பட்டவள் அல்ல !... உன்னை யாரும் படைக்க முடியாது !... தங்கநிற ஒளிகாட்டும் மேனியிலே தவழ்கின்ற பேரழகை...... சேற் கெண்டை செவ்விதழ்போல் நிறங்காட்டும் இதழ்களிலே ஊறுகின்ற பாலமுதை... கண்ணுடிப் பேழைக்குள் சிறைப்பட்ட கருவண்டு அசிவதுபோல் காட்சி தரும் விழியிரண்டை-கருவற்ற மேகம்போல் இருண்டு-கண்பறிக்கும் வித்தினிலே சுருண்டு - கால்வரையில் எட்டுகின்ற மயில் தோகைபோன்ற மழைக் கூந்தல் அழகை...
தேனூற்றில் பலாச்சுளைப் போல் மிதக்கின்ற நாக்கில் படுகின்ற காரணத்தால் சுவைபெற்றுச் சிந்துகின்ற மொழி வளத்தைப் படைப்பதற்குப் பாரினிலே யாருமில்ல !...... உனைப் பார்த்துத்தான் இனிமேல் பாவையர்க்கு அழகைப் படைக்க வேண்டும் எனத் திட்டமிடுவான் படைப்புத் தலைவன் !...
மன்னு !... மலர் எடுத்து மால் தொடுப்பது சுலபம்! அதைவிடச் சுலபமாகத் தெரிகிறது ஒரு மங்கையைப் பார்த்து ஆடவர், வார்த்தைகளால் வர்ணனை தொடுப்பது !....
கண்ணே ! உன்னை வர்ணிப்பதால் வார்த்தைகளுக்கல்லவா அழகு ஏற்படுகிறது! தமிழுக்கு அல்லவா பெருமை உண்டாகிறது!
அதுபோல, உங்கள் கழுத்தில் இருப்பதால் இந்த மால்க்கும் பெருமை ஏற்பட்டும்!......
[மாலையை அவன் கழுத்தில் போடுகிறாள். கோவலன், பிறகு மாலையைக் கழற்றி மாதவி கழுத்தில் போடுகிறான். இருவரும் ஆனந்தம்.]
[கண்ணகி கண்கலங்கியவாறு அமர்ந்திருக்கிறாள். அப்போது மாசாத்துவானும் அவர் மனைவியும் வருகிறார்கள்....]
வரமாட்டானம்மா... வர மாட்டான்!......
மாமா!......
[எழுகிறாள் கண்ணீரைத் துடைத்தவாறு]
அந்த வஞ்சகன் வரமாட்டான் கண்ணகி! வலையிலே விழுந்த மீனை விட்டான் கோவலன்!... நீயோ தரையிலே விழுந்த மீனை விட்டாய்!....
இல்ல மாமா! நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை......உட்காருங்கள்......உட்காருங்கள் அத்தை!... இதோ பழம் கொண்டு வருகிறேன்!..........
[ஓடிப்போய்ப் பழத்தட்டை எடுத்து வந்து வைக்கிறாள்.]
என் அன்பு மருமகளே! தும்பை மலர் போன்ற தூய்மையான உன் இருதயத்தை உணர முடியாத உன்மத்தன் மகனைப் பெற்றேன்! மன்னித்து விடம்மா என்னை!... உனக்கேற்பட்ட கவலையை ஒரு நொடியில் நீக்குகிறேன்—இப்போதே மாதவி வீட்டுக்குப் போகிறேன். எனக்கு மகனாகப் பிறந்த மகா பாதகனை விலங்கிட்டு இழுத்து வருகிறேன்!...
வேண்டாம் மாமா! என் விருப்பத்தோடு தான் அவர் மாதவி வீட்டுக்குப் போயிருக்கிறார்.... நான்தான் அவரை வழியனுப்பி வைத்தேன்.......நீங்கள் அங்கு போய்த் தாறுமாறாக நடந்துகொண்டால்... அவரை அவமானம் சூழ்ந்து கொள்ளும். நான் பதித்துரோகி யாகிவிடுவேன்!
கண்ணகி! என் தங்கமே! உன்னைப்போல ஒரு பெண் என் வயிற்றில் பிறக்கவில்லையே!
அத்தை!... நான் உங்கள் வயிற்றில் பிறந்திருந்தால்... அவர் எனக்குக் கணவனைக் கிடைப்பாரா?...
அவனைவிட அழகிலும் குணத்திலும் உயர்ந்தவனை உனக்குக் கணவனாக ஆக்கியிருப்பேன்....
மாமா! அவரைக் குறைகூறிப் பேசவதை என்னால் பொறுக்க முடியாது!...... உங்களைப் பற்றிக் குறைவாகப் பேசினால் அத்தை-சும்மாயிருப்பார்களா?......
அத்தையா? உன் அத்தையா? கோவலனைப் போல் நான் ஒரு மாதவியைத் தேடிப் போயிருந்தால் இந்நேரம் உன் அத்தை பெரிய இராமாயண-பாரதப் போராட்டமே ஆரம்பித்திருப்பாள். நீதான் வாயில்லாப் பூச்சியாக இருக்கிறாய்!......
நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்!... அவர் விரைவில் திரும்பி வருவார்.... அவருக்கு என்மீதுள்ள அன்பு...நெடு வானத்தில் எழுகின்ற மின்னல் அல்ல! தொடுவானத்து எல்லையையும் கடக்கின்ற ஒளிப்பிழம்பு! என்றைக்கும் அவர் என்னுடையவர்!
சரியம்மா, கண்ணகி!... அவன் திருந்தி... திரும்பி வரும்வரையில் தனியாக இருப்பானேன்? எங்கள் வீட்டுக்கு வந்து விடு!....
மாமா, எங்களைத் தனி வாழ்வு நடத்த ஏற்பாடு செய்தீர்கள்; தமிழர் வழக்கப்படி!.... அதில் நான் தோல்வி கண்டால் அல்லவா இந்த வீட்டை விட்டு அகலவேண்டும்! அவர் என்னை நெருப்பில் நிற்கவிட்டுப் போனாலும், அவர் வரும் வரை அங்கேயே நின்று கொண்டிருப்பேன்....
மானாய்கன் மகளே!... உன் மன உறுதியைப் பாராட்டுகிறேன். தமிழ்க் குலத்தின் பெருமைக்கு நீயொரு சான்று! உன் இருதயத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் ஆறாத துயரம் விரைவில் நீங்க ஆசி கூறுகிறேன்... வருகிறேனம்மா.......
சரி மாமா!......
கண்ணகி...வரட்டுமா!...தேவந்தி... என் கண்ணகியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்!...தேவை எதாவது இருந்தால் என்னிடம் நீயாவது வாம்மா!...
[தேவந்தி தலையசைத்தல்]
கண்ணகி, வருகிறேனம்மா!...
சரி அத்தை! கவலைப்படாமல் போய் வாருங்கள்!......
[அவர்கள் போகிறார்கள். கண்ணகி கண்கலங்கியவாறு சிரித்த முகத்தோடு வழி அனுப்புகிறாள்....]
[கண்ணகி அமர்ந்திருக்கிறாள். அப்போது மானாய்க்கனும் கண்ணகியின் தாயும் வருகின்றனர்]
