சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 15 · 15 / 38
கண்ணகி!
அப்பா! அம்மா! வாருங்கள்!
என்னம்மா இது...புருஷனையும் பறி கொடுத்துப் பொருளையும் பறிகொடுக்க ஆரம்பித்துவிட்டாயா?
பொருள்!... யார் சம்பாதித்த பொருள்! திரை கடலோடி அவர் தேடிய திரவியம் தானே எல்லாம்! அவர் திருப்திக்காகச் செலவிடுவதில் என்னப்பா தவறு?...
ஐஸ்வரியம்...அள்ள அள்ளக் குறையாத ஆழ்கடல் நீரல்ல!... மெல்ல மெல்லக் கரைந்துவிடும் என்பதை மறவாதே மகளே!
செல்வம் குறைந்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்-என் சிந்தை கவர்ந்த அத்தானுக்கு என்மீது அன்பு குறைந்துவிட்டால்... பிறகு...
அன்பு!... அவனுக்கு உன்மீது அன்பு!... அன்பு இருந்தால், அவன் ஏன் கணிகை ஒருத்தியின் காலடியில் கிடக்கிறான்? மாதவியாம் மாபாதகி ஒருத்தியல்லவா அவனுக்கு மகாராணியாகிவிட்டாள்!...
மாதவியை இகழாதீர்கள்... அவள் என்னைவிட உயர்ந்தவள். அழகில் மட்டுமல்ல; அன்பிலுங்கூட, அவரைப் பிரிந்து நான் உயிரோடு இருக்கிறேன்! அவள் அவரைப் பிரிந்தால் அரைக் கணமும் உயிர் தரிக்கமாட்டாள்!...அதன்காரணமாகத்தான் அத்தான்கூட அங்கேயே தங்கிவிட்டார்... என்மீது அவருக்கு அன்பில்லாமல் இல்லை; கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கல்மனம் கண்ணகிக்கு உண்டு! மாதவியின் மனமோ உடனே வாடும் மலர் போன்றது என்பதை அவர் நன்றாக அறிவார் அப்பா!...
அப்பயோ...குணக் குன்றையல்லவா என் குலக் கொடியாகப் பெற்றிருக்கிறேன். கோவலா! இந்தக் குளிர் பூங்கொத்தைக் கொடு நெருப்பில் வீசிவிட்டுப் போகலாமா நீ?...
[கண்ணகி கண்களில் நீர் வழிகிறது]
கவலைப்படாதீர்கள் அப்பா!
தங்கமே! உன்னை நாங்கள் தேற்ற வந்தால் நீ எங்களைத் தேற்றுகிறாயா? பதுமைபோல் உன்னைப் பரிதவிக்க விட்டு விட்டு, அந்தப்பாவி.......
[கோபமாக]
அம்மா! நிதானித்துப் பேசுங்கள். இப்படி யெல்லாம் அவரைச் சபிப்பதாயும், திட்டுவதாயும் இருந்தால் இனிமேல் யாரும் இங்கே வராதீர்கள்....யாரும் இங்கே வராதீர்கள்!... யாரும் இங்கே வராதீர்கள்!...
[விம்மி விம்மி அழுகிறாள்.]
[காவிரி யாற்றோரத்துக் கனி குலுங்கும் சோலை யொன்றில்...
மாதவியும், கோவலனும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடுதல். மாதவியின் எழில் நடனம்...]
*
[மாதவி திடீரெனச் சோர்ந்து உட்காருகிறாள்.]
ஏன்? ஏன் மாதவி இவ்வளவு களைப்பு?...
[அருகே வந்து]
ஒன்றுமில்ல...முன்போல என்னால் இப்போதெல்லாம் நீண்ட நேரம் ஆட முடியதில்ல...
இனிமேல் நான் உன்னை ஆடச் சொல்லவேயில்ல...போதுமா?
கோபத்தினாலா?...
கோபமில்லே கோகிலமே!....நீ அதிகமாக ஆடக் கூடாதென்று எனக்குத் தெரியும்...
ஏன்?...எதற்காகவாம்?
ஊகும்...நான் சொல்ல மாட்டேன்; உனக்கு வெட்கமாயிருக்கும்....
எனக்கென்ன வெட்கம்...நீங்கள் சொல்லத்தான் வேண்டும்.
சொல்லட்டுமா?....
ம்!...
சொல்லி விடுவேன்...
சொல்லுங்கள்....
