உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 16 · 16 / 38

ஊகும் ...சொல்ல முடியாது....

முடியாதல்லவா...சரி; நான் போய் வருகிறேன்!....

[எழ முயல்கிறாள்]

மாதவி...

ம்...விடுங்கள் என்னை!...

[எழுகிறாள்]

[கோவலன் தும்முகிறான்]

நூறாண்டு வாழ்க!

[என்று பக்கத்தில் போய், சிறிது தொலைவில் அமர்ந்து முகத்தை மூடி அழுகிறாள்]

மாதவி...ஏன் அழுகிறாய்?

நீங்கள் தும்மினீர்கள்...

ஆமாம்...தும்மினேன்...நீ வாழ்த்தியும்...பிறகேன் அதை அழித்து....அழுகிறாய்?....

யாரையோ நினைப்பதால் தானே தும்மினீர்கள்?...என்னை விட வேறு யாரை நினைக்கிறீர்கள்?

அய்யோ...நான் யாரையும் நினைக்கவில்லை...மாதவி!...யாரையும் விட நான் உன்னைத்தான் அதிகமாக நேசிக்கிறேன்; காதலிக்கிறேன்!...

யாரையும் விட!...யார் யாரை விட? அல்லியை விடவா?... அடுத்த வீட்டுத் தாமரையை விடவா? சொல்லுங்கள்... யார் யாரைவிட அதிகமாக என்னைக் காதலிக்கிறீர்கள்?...

அடடா! இது என்ன வம்பு? பெண்களுக்கே இது மாதிரி நேரத்தில் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கோபம் வருமோ என்னவோ?...

[வேறு பக்கம் போகிறாள். மாதவி, பின் சென்று]

இது மாதிரி நேரம் என்கிறீர்களே; எது மாதிரி நேரம்?...

அதுதான்; நடனமாடினால்...களைப்பு வருகிறதே; அதுமாதிரி நேரம்...

ஏன்...களைப்பு வருகிறது?...

ஓகோ...மறுபடியும் விட்ட இடத்துக்கே வந்துவிட்டாயா?...

நீங்கள் சொல்ல மாட்டீர்களே சரி!.

[போகிறாள்]

நில்! மாதவி!...மாதவி!...

என்ன!...மாதவியா?...

ஆமாம்...மா...தா...வி...தான்! இனிமேல்—நீ...மாதவிதான்!...மாதா...மாதா...நீ...மாதா...நான்...பிதா! அதனால்தான் உன்னால் அதிக நேரம் நடனமாட முடியவில்லை.

போங்கள்...

[வெட்கம்]

பார்த்தாயா...பார்த்தாயா!..அதனால் தான் சொல்லமாட்டேன் என்றேன்...

அத்தான்!....

மாதவி!....

[சோகக் குரல் கேட்கவே, திடுக்கிட்டுத் திரும்புதல்]

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை