சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 17 · 17 / 38
பகவானே! என்னை ஏன் இந்தக் கதிக்கு ஆளாக்கினாய்?...கணவனில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?...அய்யோ...அய்யோ...இந்தக் கோலத்தில் என்னைக் கைவிட்டுப் போக அவர் மனம் எப்படித் துணிந்தது?...கடவுளே!...நீயாவது என் கணவரின் கல்மனத்தை மாற்றி நல்வழியில் திரும்பச் செய்ய அருள்புரிய மாட்டாயா? அய்யோ...யாரும் எனக்கு அபயம் அளிக்கமாட்டார்களா? இந்த ஏழையின் குரல், என் கணவரின் இருதயத்தைத் தொடாவிட்டாலும்; இறைவா! உன் இருதயத்தையுமா தொடவில்லை?...
[கோவலனும் மாதவியும் வியப்போடு குரல் வந்த பக்கம் வருகிறார்கள். ஒரு பிராமண மாது கையில் குழந்தையுடன் தலைவிரி கோலமாக, காவிரி யாற்றைப் பார்த்து நிற்கிறாள்; ஓலமிட்டபடி!....]
[அருகே வந்து]
அம்மையே!...தாங்கள் யார்?...தங்களுக்கு என்ன நேரிட்டது?...
அய்யா....அந்தணர் ஒருவரின் துணைவி நான். நான் அறியாமற் செய்த ஒரு குற்றத்தை மன்னிக்க மனமின்றி என் கணவர் என்னை வெறுத்துப் பிரிந்து விட்டார்....
அப்படி யென்ன குற்றம்?..
என் கணவர் ஒரு கிளிப்பிள்ளை வளர்த்து வந்தார்!...ஒரு நாள் அவர் ஊரில் இல்லை...நீராடுவதற்குக் குளத்திற்குச் சென்ற நான் குழந்தைக்குக் கிளிப்பிள்ளையைக் காவல் வைத்துவிட்டுச் சென்றேன். அப்போது குழந்தையைக் கடிக்க ஒரு பாம்பு வரவே, அதைக் கிளி கொன்று....அந்த ரத்தத்தோடு வெளியே ஓடிவந்தது... குளத்திலிருந்து திரும்பிய நான், குழந்தையைத்தான் கிளிப்பிள்ளை கொன்றுவிட்டதென்று தவறுக் கருதி, அதன்மீது குடத்தை வீசிக் கொன்று விட்டேன்....இந்தக் குற்றத்தைப் பொறுக்க மாட்டாமல்...என் கணவர்...என்னையும் குழந்தையையும் தவிக்க விட்டு...வெளிக் கிளம்பி விட்டார்....
த்ச்...த்ச்....அப்படியா?
அதோ... அதோ... படகில் அவர்தான் போய்க்கொண்டிருக்கிறார்..... அய்யா...தயவு செய்து படகை நிறுத்தச் சொல்லுங்கள்!
ஏ...படகோட்டி!...படகை நிறுத்து!.. நிறுத்து!....
[சத்தமிட்டு]
கரைக்குக் கொண்டுவா!...
[படகு கரைக்கு வருகிறது]
[படகிடம், பார்ப்பனமாது பிள்ளையுடன் ஓடி]
என்னை மன்னித்து விடுங்கள்; குழந்தை முகத்திற்காகவாவது திரும்பி விடுங்கள்!...
அந்தணர் ; சே!...முடியாது!... என்னை யாரும் தடுக்காதீர்கள்!
அந்தணரே!...இவர்களைத் தனியே தவிக்க விட்டு நீர் வெளிச் செல்வதால்; இறந்த கிளிப்பிள்ளை உயிர் பெற்று விடுமோ?
அநியாயமாக அதைக் கொன்ற பாவத்திற்கு விமோசனம் தேடவே நான் புறப்பட்டிருக்கிறேன்.
உண்மை! கிளிப்பிள்ளைக்காக விமோசனம் தேட; பெற்ற பிள்ளையையும், கொண்ட மனைவியையும் விட்டு விட்டுப் போகிறீர்! அவர்கள் ஆதரவற்று அநியாயமாகச் செத்தால், அந்தப் பாபம் வேறு உம்மைச் சுற்றுமே!...அதற்கு விமோசனம் எங்கு போவது?...அந்தணரே பாம்பு குழந்தையைக் கடிக்குமா கடிக்காதா என்று தெரியாமலே கிளி அதைக் கொன்றுவிட்டது! அது போலவே, கிளி குழந்தையைக் கடித்ததா, கடிக்க வில்லையா என்று தெரியாமலே உமது மனைவி அதைக் கொன்றுவிட்டார்கள்!
அதனால்...சரிக்குச் சரி ஆகிவிட்டது. நீர் உமது மனைவியோடு வீட்டுக்குப் போவதே முறை....
அருமையான விளக்கம்... இந்த அந்தணனுக்கும் புரியாத விளக்கம்;....
எல்லாம் தமிழ் மறை தந்த பழக்கம்!...
நாங்கள் வருகிறோம்...வாழ்க! வாழ்க!
[போகிறார்கள்...போனதும்]
அத்தான்... நான் ஒன்று கேட்பேன், கோபிக்கக் கூடாது.
கேள்; என் செல்வமே!
மனைவியை விட்டுப் பிரிந்த மறையவருக்கு அறவுரையாற்றினீர்களே; அது போல் தானே தங்கள் துணைவி...என் அக்காள் வாடிக்கொண்டிருப்பார்கள்... எத்தனை முறை சொல்லுகிறேன்; போய்ப் பார்த்து வாருங்கள் என்று.
கண்ணகி முகத்திலே விழிக்க வெட்கமாயிருக்கிறது கண்ணே!
நீங்கள் என்னைக் காதலிப்பது அவ்வளவு வெட்கக்கேடான காரியமா? அதையாவது சொல்லுங்கள்.
சரி...சரி...வா...போகலாம்!
ஊகும் - ஊருக்கு உபதேசம் செய்தால் போதாது! நீங்கள் கண்ணகியக்காணப் போய்ப் பார்த்துவருவதாக உறுதி கூறினால்தான் உங்களோடு பேசுவேன்.
சரி, ஆகட்டும்!...
