உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 8 · 8 / 38

அந்த நெருக்கடியிலிருந்து மாதவியை விடுவிக்க அதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

பயத்திலே கூட என் இருதயத்தின் ஆழத்தில் கடல் முத்தைப் போல் நம்பிக்கை குவிந்து கிடந்தது அத்தான்!

பெண்களே சந்தேகப் பிறவிகள். என் கண்ணகி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

போங்களத்தான்; நான் உங்களைச் சந்தேகப்படவே மாட்டேன். நீங்கள் என் ஒருத்திக்கு மட்டுமே உரியவர்!

ஆமாம் கண்ணகி! நீ யில்லாமல் என் வாழ்வுக்குச் சுவையே யில்லை!

ஈடு இணையற்ற என் இன்பப் புதையல் இடையிலே வந்த மாதவி பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என நடுங்கினேன். “மாமுது பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து நிகழ்த்திய திருமணம்” சக்தியற்றுப் போய்விடுமோ எனக் கலங்கினேன்!...

கண்ணகி! அன்று, நீல விதானத்து நித்திலப்பூம் பந்தலின்கீழ் நீயும் நானும் கரம் பிடித்தபோது நெஞ்சில் எழுந்த உறுதியை என்றும் தளர விடமாட்டேன்.

உண்மைதானே அத்தான்! என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா?...

மறக்காதது மட்டுமல்ல, மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!...என வருணித்துக் கொண்டே யிருப்பேன். நீ மலையிடைப் பிறவாமணி! அலையிடைப் பிறவா அமிழ்தம்! யாழிடைப் பிறவா இசை!....

அத்தான்!...

கண்ணகி!...

[அப்போது தாழ்வாரத்தில் “கண்ணகி” என்ற குரல் கேட்கிறது. கண்ணகி, கோவலனைப் பிரிந்து, வெளியே செல்கிறாள்.]

[கண்ணகி, தாழ்வாரத்துக்கு வருகிறாள். அங்கே மாநாய்கனும், அவன் மனைவியும்—சோகமுகத்துடன் நிற்கிறார்கள்.]

கண்ணகி!

[என ஓடிவந்து தழுவிக்கொண்டு]

கண்ணகி, என்னம்மா! உன் தல எழுத்து இப்படியாகுமென்று நான் கனவுகூடக் காண வில்லையே!...

[விம்மியுடன்]

அம்மா!!!

கண்ணகி, கவலைப்படாதே! எல்லாம் நன்மையாகவே முடியும்! நீயும் உன் கணவனும், இணைபிரியாமல் இல்லறம் நடத்துவீர்கள் என்றுதான் நேற்று வரையில் நம்பி யிருந்தேன்...நடுவே இப்படிப் புயல் கிளம்பும் என்று நினைக்கவே யில்லையம்மா!...

[மேலும் விம்மியுடன்]

அப்பா!

[அதற்குள் மாசாத்துவானும் அவன் மனைவியும் வேகமாக வருகிறார்கள்]

[கோபமாக]

கண்ணகி! எங்கே கோவலன்?

மாமா!...

மாசாத்துவான்! பார்த்தீர்களா உங்கள் மகன் செய்த வேலையை! என் மகளே இப்படி வேதனை வடிவமாகி விட்டாளே?

மாநாயகரே! கவலைப்படாதீர்! அவனுக்கு நான் பாடங்கற்பிக்கிறேன்...... கண்ணகி! பயப்படாதே! இந்த மாசாத்துவானுக்கு மருமகளாக வாழ்த்து; மனங் கலங்க உன்னை விடமாட்டேன்!...

மாமா! சொல்வதைக் கேளுங்கள்!.... அவரைப் பற்றித் தவறு எண்ணாதீர்கள்; அவர் என் தெய்வம்!

உனக்குத் தெய்வம்; எனக்கு மகன்!...என் பாரம்பரைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டு, அந்தக் கணிகை மாதவியை மணக்க நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்.

அவர் ஒன்றும் அவளை மணக்கப் போவதில்ல.

மணக்கப் போவதில்ல; கற்புக் கனி யுன்னைத் தாரமாக்கித் தனி வாழ்வு நடத்துவதற்கு வசதி தந்தால், பிணி போலத் தொத்துகிறான் பிறிதோர் பக்கம்! நன்று! நன்று! இந்த நாச வேலைக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

அத்தை!...மாமா! உண்மை உணராமல்......

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை