உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 7 · 7 / 38

பேசாதே; வசந்தமாலி! மாதவி வீண் பிடிவாதம் செய்யாதே! கொடுத்துவிடு மாலையை! ஒருவனையே மணந்து வாழ்வேன் என்று நீதான் சொன்னாய்; இப்போது நீயே என்னை அவமானப்படுத்துகிறாய்.....

அம்மா...ஒருவரை மணந்து வாழ்வேன் என்றேன்—இப்போது கன்னிப் பெண்ணுகவே காலங் கழிக்கத் தீர்மானித்து விட்டேனம்மா.

உன் இஷ்டப்படி நாட்டியமாட என்னால் முடியாது!...

[கண்ணகி கோவலனிடம்]

ஐயோ, பாவம்; மாதவி!...அத்தான்! நீங்கள் தான் போய் அவளைக் காப்பாற்றுங்களேன்!

[மேடையில் கிழவரின் காலில் மாதவி விழுந்து]

பெரியவரே! என்னை மன்னித்து விடுங்கள்!

இதென்ன வேடிக்கை! ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து மாலையை வாங்குகிறவர் உன்னை அடையலாம் என்றார்கள்!...அதுவும் சபை நடுவில்! இப்போது மாறுவது என்னால்...எனக்கு ஒன்றும் புரியவில்லையே!

[கோவலன் மேடைக்கு வந்து]

பெரியவரே! மாலையும் வேண்டாம் மாதவியும் வேண்டாம்; வாருங்கள் போகலாம்.......

நன்றாயிருக்கிறது கோவலா; உங்கள் தமிழ் நாட்டு நியாயம்!

கிழவனுக்கு இளங் கிளி மாலையிடுவது தமிழ் நாட்டுப் பண்பல்ல!

பிறகேன் மாலை வாங்குகிறவர் மாதவியை அடையலாம் என்று கூற வேண்டும்?....

மாலை வாங்கத் தகுதியுடையவன் மாதவியை அடையலாமென்பது அவள் தாயாரின் நிபந்தனை. மாதவியை அடையத் தகுதியுடையவனே மாலையை வாங்கலாமென்பது என் தீர்ப்பு. வாருங்கள் போகலாம்.

முடியாது! என்னைத் தவிர வேறு யாரும் மாதவியை அடைய முடியாது!

ஏன்?...

ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் தரக்கூடிய தகுதி வேறு யாருக்குமில்லை இங்கு!

என்ன சொன்னீர்? தமிழகத்தின் தகுதி பற்றி இழித்துரைத்த முதல் மனிதனே நீர் தான். இதோ இதுபோல நூறு மால்களை வாங்கக்கூடிய ஆற்றலும் செல்வமும் தமிழருக்குண்டு என்பதை மெய்ப்பிக்கிறேன்...கொடு மாதவி மாலையை! ம்! இதோ ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் பெறுமானமுள்ள முத்தாரம்!

[என மாதவி கையிலுள்ள மாலையைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்திலுள்ள முத்தாரத்தை அவள் கையில் தருகிறான்.

கண்ணகி அதிர்ச்சி]

[கோவலன், மேடையினின்றும் இறங்கி கண்ணகி இருக்குமிடம் வந்து...]

கண்ணகி, வா—போகலாம்!...

அத்தான்!...

பயப்படாதே—வா!

[அவையும் கலைகிறது. கூட்டத்தோடு கூட்டமாகக் கிரேக்கக் கிழவரும் நழுவுகிறார். கூட்டத்தோடு கோவலன் - கண்ணகியும் வெளியேறுகிறார்கள்.]

[கோவலன் போய்விட்டது கண்ட மாதவி வசந்தமாலியிடம்]

வசந்தமாலி! அவர் மாலையை வாங்கிக்கொண்டு போய்விட்டாரே!

ஏன்? என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?...

இது கூடவா புரியவில்லை? அவரை வீட்டுக்கு அழைத்துவரச் சொல்கிறாள்...என்னம்மா மாதவி, அப்படித்தானே?...

[மாதவி நாணத்தால் தலைகுனிந்து வசந்தமாலையை நோக்குதல்]

[அழகான மஞ்சம். மஞ்சத்திலே மல்லிகை மலர்கள் பரப்பப் பட்டுள்ளன. பலகணி வழியே நிலவு! நிலவைச் சுற்றி விண் மீன்கள்! நிலவொளியில் கோவலனும் கண்ணகியும்]

அத்தான்! முதலில் நான் பயந்தே விட்டேன். என் நெஞ்சில் நெருப்பு பட்டது போல் இருந்தது அந்த நிகழ்ச்சி.

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை