உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 6 · 6 / 38

வயதாகிப் பழுப்பேறிவிட்ட உங்கள் இருதயத்தில் கூட இளமையின் வசந்தத்தை எழுப்புகின்ற இவள் பெயர் மாதவியாம்—நான் கூட இன்று தான் முதல் முதலாகப் பார்க்கிறேன்!...

[ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று அவையினரின் பாராட்டுதலுடன் முடிவுபெறுகிறது........

மாதவி மேடையினின்றும் இறங்கி வந்து சோழ மன்னனை வணங்கி நிற்கிறாள்...]

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும், பண் நிறை கூத்துப் பதினொன்றும் —மண்ணின்மேல் போக்கினள்; பூம்புகார்ப் பொற்றொடி மாதவி, தன் வாக்கினில் ஆடரங்கின் வந்து!

[எனக் கூறி, சோழன், இலயாலும், பூவாலும் செய்யப்பட்ட ஒரு மாலையும்; தலைக்கோல் ஒன்றும், ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன் முடிப்பும் பரிசாக அளிக்கிறான். பின் சோழன் அதைவிட்டு அகலுகிறான்.]

(நாட்டியத் தலைவன் கையிலுள்ள கோலுக்குத் தலைக்கோல் என்று பெயர்.)

[சித்ராபதி, கூனியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லுகிறாள்......

கூனி, மாதவியிடமுள்ள மாலையைக் கையில் வாங்கிக்கொண்டு மேடையில் நின்று ......]

பெரியோர்களே! சித்ராபதியின் மகள் மாதவியின் கலைத் திறனை இதுவரை சுவைத்தீர்கள். மாதவியை வாழ்க்கைத் துணைவியாகப் பெறும் பாக்கியம் நமக்குக் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் காத்துக் கிடக்கிறார்கள்! அதற்காக இப்போது ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!.

அப்படிச் சொல்! அப்படிச் சொல்!! சுயம் வரத்தில் என்ன செய்ய வேண்டும்?

நான் தயார்!......

[எல்லோரும் சிரிப்பு]

அரசரால் மாதவிக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இந்த மாலையை ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து வாங்குகிறவர்—அவளுக்குக் கணவனுகலாம்!...

[அவையில் ஒருவருக்கொருவர் “ஆயிரத்தெட்டுப் பொன்! ஏ, அப்பா!” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.]

இதோ; ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்!

[மேடையருகே ஓடுகிறான். சித்ராபதியும், கூனியும்...ஒருவருக் கொருவர் மகிழ்ச்சி!]

வசந்தமாலி? ...?....!....!

[தோழியிடம் திரும்பி வந்து]

[திகைப்புடன்] மாதவி!...

[மேடைக்கு வந்த கிழவர் பொன் முடிப்பை அவிழ்த்துக் கொட்டியவாறு]

ம்! தமிழ் நாட்டு முத்து வாங்கக் கொண்டு வந்தேன். ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்! இந்தா—இது இந்த மாலைக்காக அல்ல! மாதவிக்காக! கொடு மாலையை....

[மாதவி, திடுமென கூனியின் கையிலுள்ள மாலையைப் பிடுங்கிக்கொண்டு சித்ராபதியைத் தழுவியவாறு—“அம்மா” என விம்முகிறாள்.]

மாதவி!...என்ன இது குழந்தை மாதிரி! கொடு மாலையை!...

ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னுக்காக...இந்த நூற்று எட்டு வயதுக் கிழவனே மாதவி மணப்பதா?...

யாருக்கு நூற்று எட்டு? ஆளப் பார் இளவெட்டு! எனக்கு அறுபத்தெட்டு முடிந்து நான் எட்டு தான் ஆகிறது ஞாபகம் வைத்துக்கொள்!...

[கோவலனும் கண்ணகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுதல்.]

அந்தோ! இந்தச் சபையில் ஆயிரத்தெட்டு பொன் தரக்கூடிய வாலிபர்கள் யாருமே இல்லையா?...கிளியை வளர்த்து இந்தக் கிழட்டுப் பூனை கையிலே கொடுப்பதா?...

நான் சொல்வதைக் கேளுங்கள்! மாதவியின் சுயம்வரத்தை ஒத்தி வைத்து விடலாம்.

உஸ்! பேசாமலிரு! இந்தச் சித்ராபதி வாக்குத் தவறமாட்டாள்! மாதவி திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும்.

அதை யார் மறுத்தார்கள்! ஆனால் யாரை?...

இந்த மாலை வாங்கியவரை!

அப்படியானால், இவர் இந்த மாலையை வாங்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்! ஐயா பெரியவரே!...தயவு செய்து எங்கள் மாதவியைக் காப்பாற்றுங்கள்!...

காப்பாற்றுகிறேன் — வாழ்க்கை முழுதும் அவளை வைத்து நான் காப்பாற்றுகிறேன்;அதற்கு என்னிடமிருக்கிற பொருள் போதும்!

பொருள் போதும்! ஆனால் வயது போதாதே தங்களுக்கு! இன்னும் நாலு வருடமோ, ஐந்து வருடமோ?

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை