உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 5 · 5 / 38

அவர்களுக்குத் தெரியவில்லை தமிழ் நாட்டில் முத்து, பவளம், மயில், அகில் இவை எல்லாவற்றையும் விட, விலை மதிப்பற்ற பொருள் ஒன்று இருப்பது...

என்னதான் அது? எனக்கே தெரியவில்லே?

என் கண்ணகிதான் அந்த ஒப்பற்ற பொருள்! உயிர் படாச் சிற்பம்! உயிரோடும் ஓவியம்! வெளி நாடுகளில் நான் உலாவும் போதெல்லாம் “கண்ணகி பிறந்த தமிழ் நாடு” என்று என் காதல் நெஞ்சம் கவிதை பாடிக்கொண்டே இருக்கும்.

அத்தான், இனிமேல் என்னைப் பிரியமாட்டீர்களே?

தமிழை விட்டுச் சுவை பிரியுமா?

வேற்று மொழி குறுக்கிட்டால்?

விண் கனவு! விழிக்கு ஒளி போல— வீணைக்கு நாதம் போல—விண்ணுக்கு நிலவு போல...என்றென்றும் உன் அருகிருப்பேன்.

விண்ணுக்கு நிலவா? அத்தான்! அது, கண்ணுக்குத் தெரியாது ஒருநாள்! காரிருள்! அமாவாசை அதன்பேர்! வேண்டாமத்தான் அதுபோல!

கண்ணகி! கயலெழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம்—தேன் சிந்தும் திங்கள் முகம்—மறப்பேனு கண்ணே! வா! விழாக் கோலம் பூணுவோம்! பிரிந்திருந்த நாட்களில் அனுபவித்த துன்பத்திற்கு இந்த ஒருநாளில் முடிவுகாண்போம், வா!...

[அப்போது, படகிலிருந்து மெதுவாக இறங்கிக் கிரேக்கக் கிழவர் அருகே வந்து]

என்ன கோவலா! என்னை மறந்தே விட்டாய் போலிருக்கிறது?...

மன்னிக்கவும்!...

[கண்ணகிக்கு அவரை அறிமுகப் படுத்துகிறான்]

இவர் கிரேக்கத்தில் பெரிய செல்வந்தர்!

[கண்ணகி வணங்குதல்]

திலசிறந்த வாணிப வேந்தர்! அங்கே நமது பொருள்கள் இவர் மூலமாகத்தான் விற்பனையாகின்றன—பார்வைக்குக் கிழவரே தவிர—ஒரு வாலிபனுடைய குறும்பு அத்தனையும் இவருக்கு உண்டு!

இரு! இரு! என்ன அப்படிச் சொல்லி விட்டாய்?...என்னைப் பார்த்தால் கிழவனுகவா தெரிகிறது?......தமிழ்ப் பெண்ணே! நீ சொல் நான் கிழவனா?

இல்ல தாத்தா!....

ஆங்...அப்படிச் சொல்! கோவல! தாத்தா என்றால் என்ன?

ஆணழகர் என்று அர்த்தம்...

ஆங்...மகிழ்ச்சி...மகிழ்ச்சி பொருத்தம்...பொருத்தம்...

என்னிடம்தான் கண்ணகி, இவர் தமிழே கற்றுக் கொள்கிறார்...

அப்படியானால் முத்தமிழில் இயல், இசை இரண்டும் தெரிந்திருக்கும்.

ஆங்...இயல்...இசை...‘தெரியும்’ கூத்துதான் தெரியாது!...

அத்தான்; இந்திர விழாவையொட்டி, இன்று முத்துப் பந்தலில் மாதவியின் நடனம் இருக்கிறது...மூவருமேசென்று பார்க்கலாமே!...

நடனமென்றல் ?...

[நடனம் போல் அபிநயங் காட்டி]

கூத்து!

[மாதவியின் நடனம் நடைபெறுகிறது... சோழ மன்னனும் அரச மரபினரும், மற்றும் அரண்மனை மகளிரும், வணிகப் பெருவேந்தர்களும், அமர்ந்திருக்கிறார்கள்.

மாதவியின் தாய் சித்ராபதியும், கூனியும், தோழி வசந்தமாலையும் மேடை முகப்பில் அமர்ந்திருக்கிறார்கள். கோவலன், கண்ணகி, கிரேக்கக் கிழவர் மூவரும் பந்தலில் நுழைந்து அவர்களுக்குரிய இருக்கைகளில் அமருகிறார்கள்.

அவையினரும் அரசர் முதலானவரும் வியப்பும், மகிழ்வும் அடையும் வண்ணம் மாதவியின் நடனம் நடைபெறுகிறது. கிரேக்கக் கிழவர் நடனம் கண்டு அயர்ந்து விடுகிறார்.]

[இடையே]

கோவலா! அது ஓவியமா?...சிலையா?....உயிருள்ள பெண்தானா?...

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை