உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 35 · 35 / 38

நான் போய் வரவா, கண்ணே!

[உணர்ச்சிகள் புத்துயிர் பெறுகின்றன! கண்ணகியின் இதழ்கள் அசைகின்றன! உரக்க ஒலி எழுப்புகிறாள்]

போகக் கூடாது! நீங்கள் போகக் கூடாது! போனால் கொன்று விடுவார்கள்!...

[என்ன உளறுகிறோம் என்று தனக்குத் தானே சிந்திக்கிறாள் போலும்]

கொன்று விட்டார்கள்! கள்வன் என்று குற்றம் சாட்டிக் கொன்றுவிட்டார்கள்! அத்தான், நீங்கள் கள்வனா? கள்வனா? இல்ல! இல்ல! இல்ல!

[என முழங்குகிறாள். உணர்ச்சி, குழுமும் கடலாகிறது. ஓடத் துவங்குகிறாள்! ஓடும் வேகத்தில் பெரிய குத்து விளக்கு குடிசையின் மீது சாய்கிறது.

அதை யார் அந்த நேரத்தில் கவனிப்பது?

அனைவரும் கண்ணகியைத் தொடர்ந்து ஓடுகிறார்கள்.

கண்ணகி,

கண்ணகி என்று கதறியவாறு!

அத்தான்,

அத்தான் என்று அவள் ஓடுகிறாள்.

சாய்ந்த குத்து விளக்கிலேயிருந்து தீ பற்றிகிறது குடிசையிலே! குடிசை எரியத் துவங்குகிறது!

பல இடங்களில் தீ பரவுகிறது. கண்ணகி ஆவேசமாக ஓடிக்கொண்டே யிருக்கிறாள்.]

[கோவலன் வெட்டுண்ட செய்தி அறிந்த கண்ணகி துடித்துக் கொண்டு ஓடிவருகிறாள். வெட்டுண்ட கணவனின் உடல் மீது விழுந்து கதறி அழுகிறாள்]

அத்தான், என்னை ஏமாற்றி விட்டீர்களே! அத்தான்! நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கேன் பிறப்பு இந்தத் தண்டனை? சொல்லுங்கள் அத்தான், சொல்லுங்கள்! பேச மாட்டீர்களா அத்தான்? மாசறுபொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே என்றெல்லாம் என்னைக் கொஞ்சுவீர்களே, அந்தக் கொவ்வைக் கனிவாய்த் திறந்து பேசுங்கள் அத்தான்! அத்தான், ஒருமுறை பேசுங்கள் அத்தான்! அத்தான்! அத்தான்! உங்கள் கண்ணகி வந்திருக்கிறேன் அத்தான்!

பேசுங்கள் அத்தான்! பேசமாட்டீர்களா! பேசமாட்டீர்களா? வேண்டாம்.

[சினங் கொண்ட புலிபோலக் கண்ணகி எழுகிறாள்.]

வேண்டாம்! உங்களுக்காக இந்த உலகத்தையே பேச வைக்கிறேன். நீங்கள் கள்வரல்ல. என் உள்ளம் கவர்ந்த கள்வரே, நீங்கள் கள்வரல்ல. இதை உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும். வளைந்த செங்கோல்க் கையில் வைத்திருக்கும் பாண்டியன் தலை குனிய வேண்டும். உங்களே ரத்தச் சகதி யிலே புரளவிட்ட அநியாயக்காரர்களைப் பழி வாங்க வேண்டும். மதுரை மூதார், மாசற்ற உங்களே குற்றவாளியாக்கித் தன் புகழைக் குறைத்துக் கொண்ட மதுரை மூதார் அழிய வேண்டும்.

அடியோடு அழிய வேண்டும். பழிக்குப்பழி! பழிக்குப்பழி! அத்தான்! உங்கள் ரத்தத்தின் சாட்சி.

[வெட்டுண்ட கோவலன் மீது வடிந்துள்ள ரத்தத்தை எடுத்துத் திலக மிட்டுக்கொள்கிறாள்]

வருகிறேன். நொடியில் வருகிறேன்.

[கண்ணகி கனல் கக்கும் விழிகளுடன் தனது காலில் இருந்த மற்றொரு சிலம்பைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு, சினங் கொண்ட வேங்கையெனப் பாண்டியன் அரண்மனை நோக்கி ஓடுகிறாள்]

[கண்ணகி வருகிறாள், கையிற் சிலம்புடன்! காவலர் அவள் அதிகாரத்துடனும் வியப்புடனும் நோக்குகின்றனர்.]

காவலரே! காவலரே! காவியுக நீருங் கையில் தனிச் சிலம்பும் ஆவி குடிபோன வடிவுங் கொண்டு ஒருத்தி வந்திருக்கிறுள், உம்மைச் சந்திக்க; என்று உமது மன்னனிடம் சென்று உடனே கூறுவீர்! உடனே கூறுவீர்!!

[காவலர் உள்ளே செல்லுதல்]

மன்னவா! கண்ணீரும் கம்பலையுமாக ஒரு பெண்மணி தங்களை அவசரமாகக் காணவேண்டு மென்று துடிக்கிறாள்!

அப்படியா!?

அழைத்து வா உடனே!

[கண்ணகி வருகிறாள் எரிமலை போல! அவைக்க்களம் திகைப்பில் ஆழ்கிறது!]

யாரம்மா?... வேதனை உருவமாகக் காட்சி தரும் நீ யார்?

புகழுக்கு உடல்தந்து புகழ் பெற்ற மன்னவரின் வரலாற்றைத்-தேர்க் காலில் மகனையிட்டு நியாயம் காத்த மனுநீதிச் சோழனது பெருங்கதையை நீதியின் இலக்கணமாய்ப் பெற்றுப் பெருமை கொண்ட திருமாவளவன் கரிகாற் சோழனது பூம்புகாரே எனது ஊர்!

பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள்!

என் பெயர் கண்ணகி!

உன் முறையீடு என்னவோ!

முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மும்முரசு கொட்டி, முச்சங்கம் வளர்த்து, முக்கொடியின் நிழவிலே, முத்தமிழைக் காப்பாற்றும் மூவேந்தர் பரம்பரையின் பெருமைதனை மூளியாக்க முடிபுனைந்த மன்னவனே! என்றன் முறையீட்டைக் கேட்பதற்குமுன் நான் யாரென்று முழுவதும் தெரிந்து கொள்க!

யார் நீ!

கண்ணகி!

கையில் தனிச் சிலம்போடு வந்திருக்கும் கண்ணகி! மெய்ப்பிற் பொடியும் விரித்த கருங்குழலும் நெறித்த புருவமும்கொண்டு நீதி வழுவா நெடுஞ்செழியப் பாண்டியனைத் துணிந்து இகழ்ந்துரைக்கும் கண்ணகி! அவ்வளவுதான் உனக்குத் தெரியும்!

பாண்டிய மன்னு! ரோமாபுரியின் கொலு மண்டபத்திலே உனது தூதுவர் இருக்கிறகள்! இதோ, பாண்டியத்துப் பேரவையிலே ரோமானியர் வீரர்களாகவும் தூதுவர்களாகவும் வீற்றிருக்கிறார்கள்! கடல் கடந்து கொடி கட்டி ஆளுகின்றீர்கள்!

அந்தக் கொடிக் கம்பம் முறிந்து விழ...

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை