உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 34 · 34 / 38

(புரியாமல்) பொற் கொல்லரே!—

சிலம்பை அவரிடம் கொடு.

[சிலம்பைக் கோவலன் அதிகாரியிடம் கொடுக்கிறான்]

உனக்கேது இந்தச் சிலம்பு?

என் மனைவியின் சிலம்பு!

இதை விற்க வேண்டிய காரணம்?

வாங்குபவருக்குத் தேவை இல்லாத கேள்வி!

திறமையான திருடன்!

[திடுக்கிட்டு]...தி ரு ட ன்... பொற் கொல்லரே! ஏன் இந்தப் பழி என்மீது? இது என்ன அநியாயம்?

அரசியின் சிலம்பைத் திருடியது மட்டும் நியாயமோ?

யார் திருடியது உங்கள் அரசியின் சிலம்பை? அதைக் கண்டுபிடிக்கத் திறனற்றவர்கள்...வழியிலே போகிறவன் மீது பழியைப் போடுவதா?

அடக்கடா வாயை! பஞ்சமா பாதங்களின் நிழல்கூட நுழைய முடியாத பாண்டி-மண்டலத்தில் ஓர் பாதகம் உன்னுருவிலே நுழைந்திருக்கிறது என்பதைக் கேட்டு மன்னர் பதைக்கிறார்...துடிக்கிறார்!

அந்த மன்னரை நான் காணுகிறேன். கள்வனல்ல காவலரே நான்....கருத்தழிந்த காரணத்தால் கைப்பிடித்த மணிவதனக் கண்ணீரில் மிதக்கவிட்டுக் கனக மலை, வைர மலை, கணக்கிடவே முடியாத வெள்ளி மலை, அத்தனையும் அழித்துவிட்டுப், பிழைப்புக்கு வழி தேடிப் பிற நாடு வந்திட்ட மா பாவி! என் சீதளச் செந்தமிழாள்...சிந்தைக்குப் பெரு விருந்து...அவள் செந்தாமரைக் கால்களிலே அணிந்திருந்த சிலம்புதனை விற்பதற்கும் துணிந்து விட்ட கொடுமையாளன் என விளக்குகின்றேன்.

ஐயா! தமிழ் படிந்த நெஞ்சமிது...தமிழ்த் தாயின் வயிற்றினிலே கருவாகி உருவாகித் திருநாட்டின் மண்மீது தவழ்ந்தவன் நான்...இருட்டு மதி படைக்கவில்லை; திருட்டுத் தொழில் நடத்துவதற்கு என்பதனைக் கூறுகின்றேன். எந்நாடும் புகழ்கின்ற பெரு வேந்தன் நெடுஞ்செழியன் அவைக் களத்தில் நீதிதனைப் பெறுகின்ற உறுதி எனக்குண்டு, உடன் அழைத்துச் செல்வீர் வேந்தரிடம்!

வேந்தரென்ன உன் வீட்டுக் காவலனு?

நாட்டுக்குக் காவலன்! நீதிக்கு—நேர்மைக்கு—அறத்துக்கு—அன்புக்கு—தமிழுக்குக் காவலன் நெடுஞ்செழியன்! அநீதி, அணுவிலோர் பாதி அவன் ஆட்சியில் நடைபெறவும் அனுமதிக்கமாட்டான் என்றகிலும் புகழக் கேட்கிறேன். அந்தப் பாண்டியத்துப் பெரு வேந்தன் பார்க்கட்டும் என் முகத்தை! கள்வருக்குரிய இலக்கணத்தைக் காண்பானு? களங்கத்தின் சாயல்தனை எடுத்துக் காட்டுவானு? முகக்குறியால் நீதி சொல்லும் முடிவேந்தன் நெடுஞ்செழியன் முன்னிலையில்

நிற்கின்றேன். அவன் முடிவுகளை ஏற்கின்றேன். இட்டுச் செல்வீர் மன்னரிடம்!

கைகாரக் கள்வனே; உன் போன்ற பாவிகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.

ஏன், உன் முகத்தைப் பார்ப்பவர் என் முகத்தைப் பார்க்கமாட்டாரா?

எனப்பா, உனக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு? திருடியதுமல்லாமல் திமிர் வாதம் வேறு? எதிர்த்துப் பேசாமல் உண்மையைக் கூறி விடு!

பொற் கொல்லரே, நான் கள்வனு?

கள்வன்தான்; நீ கள்வன்தான்!

ஆம்; நீ கள்வனேதான்.

கள்வன்; நான் கள்வன்! கண்ணகி, உன் கணவன் கள்வன்! என் பத்தரை மாற்றுத் தங்கமே, பாண்டிய நாடு தீர்ப்பளிக்கிறது அப்படி. நான் கள்வனு கண்ணே! அப்பேயோ! கண்ணீர் ததும்ப விடை கொடுத்து அனுப்பினாயே கண்ணகி! இப்படி ஒரு களங்கம் எனக்கு வருமென்று தெரிந்துதானோ கண்மணி...! தித்திக்கும் செந்தேனே! தெருப் புழுதியில் வீணையென உன்னை வீசி விட்ட கயவனுக்குச் சரியான பரிசு! கள்வன்! கள்வன்! கள்வன்! அய்யோ! ஏற்கனவே ஏக்கத்தால் வாடிவிட்ட உன் இதயம் இந்த இழிசொல் எனக்குக் கிடைத்த செய்தியை எப்படித்தான் தாங்கிக் கொள்ளுமோ?

கண்ணகி! ஏன மணந்தாய்; இன்பம் பெறலாம் என இருந்தாய்! எரிமலையாய் ஆக்கிவிட்டேன் உன்னுடைய வாழ்வை! அது போதாதென்று கள்வனின் மனைவியடி. கண்ணகி என்று ஊரார் தூற்றுதற்கும் உனை ஆளாக்கி விட்டேன். உதய தாரகையே! ஒப்பில்லா மாணிக்கமே! மாட மாளிகை கூட கோபுரத்திலே அமர்ந்து மகர யாழ் நீ மீட்ட-மந்த மாருதம் தாலாட்ட-உன் மடிதனிலே உறங்க வேண்டிய நான், மதுரை மாநகரில் கள்வன் எனும் கணை தாக்கக் கதறுகின்றேன்; புலம்புகின்றேன்; நான் கள்வனும்!

நீ சொல் நான் கள்வனா? நான் கள்வனா?

ஏ; இதோடு உன் வாழ்வு முடிந்து விட்டது.

[கோவலன் கழுத்தில் தளபதியின் வாள் பாய்கிறது]

[கூத்தின் முடிவில் ஐயை, ஒரு சோக கீதத்தை வேதனை அசைவுகளோடும் உச்சக் குரலில் பாடியும், அபிநயம் பிடித்து முடிக்கின்ற கட்டம்!

பக்கத்தில் தோழிகளும் வான் நோக்கி முகத்தையும் கையையும் உயர்த்தி, சோக அபிநயம் காட்டுதல்.

கண்ணகி, அந்தச் சோகக் கட்டத்தில் தன்னை மறந்து மூழ்கி விடுகிறாள்.

அப்போது மாதரி ஓடி வருகிறாள்!]

[அலறியவாறு] கண்ணகி! கண்ணகி!

[திடுக்கிட்டு] ஆ!

சிலம்பு கவர்ந்த கள்வனென்று குற்றம் சாட்டிக் கோவலனைக் கொன்று விட்டார்களாம், அம்மா!

ஆ!

[என அலறி விழுகிறாள். அனைவரும் ஓடிவந்து கண்ணகி! கண்ணகி! எனச் சூழ்தல்! குப்புற வீழ்ந்த கண்ணகி, கண் விழிக்கிறாள். கண்களிலேயிருந்து அருவி யென நீர் பெருக்கெடுக்கிறது!

உணர்ச்சிகளே அற்றுப் போன வெற்றுடம்பு மெல்ல எழுகிறது. கண்கள் ஏதோ நினைவில் பெயர்க்க முடியாதபடி பதிந்திருக்கின்றன!]

[நினைவுத் திரையில் பழைய காட்சி]

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை