உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 33 · 33 / 38

மிகவும் நன்றி!

[வணங்கி உட்காருகிறான். பொற்கொல்லர் மற்றவர்களை அழைத்துச் சைகை செய்தவாறு]

நீங்கள் இருவரும் இவருக்குத் துணையாக இங்கேயே இருங்கள். நான் வந்து விடுகிறேன்.

[பொற் கொல்லர் செல்கிறார்]

[அவைக்க்களம் செல்லுதற்குரிய உடை பூண்ந்து புறப்படத் தயாராகிவிட்ட பாண்டியன், அரசியை நோக்கி...]

நேரமாகிறதே! நீ புறப்படவில்லை நீதி மன்றத்துக்கு?...

நான் வரவில்லை, சிலம்பில்லாத காலோடு!

இன்று நீதி மன்றத்தில் சிலம்புத் திருடனையுந்தான் கண்டு பிடிக்கப் போகிறேனே!

ஆகா...எவ்வளவு அக்கறை? உங்களுக்குப் புறப்பட்டு எழுவதும், போர்த் தளவாடம் சேகரிக்கவும், பொழுதெல்லாம் பாண்டி மண்டிலத்துச் சேதி கேட்கவும் நேரமிருக்குமே தவிரப், பொலிவிழந்து கிடக்கிறதே துணைவியின் பாதம்...என்ற கவலை வேறு இருக்கிறது?...

உன்னையும் என்னையும்விட நாடு பெரியது என்பதை மறந்து விடாதே!...அற்பச் சிலம்புக்காக...ஒரு அரசி இவ்வளவு கவலைப்படுவதா?

அற்பச் சிலம்பாகத்தானிருக்கும் தங்களுக்கு! நானே அற்பமாகிவிட்டேனல்லவா; அதனால்!

சரி...சரி...நீ வருகிறாயா இல்லையா; நீதி மன்றத்துக்கு?

சிலம்பில்லாமல் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன்...

ம்...சரி...வருகிறேன்!

[என வேகமாகப் போகிறான்!

[வெளியே அதிகாரி(சிலம்புத் திருடன்)தயாராக இருக்கிறான். வணங்கிப் பின்னால் செல்கிறான்]

[அதிகாரி பின் தொடர வேகமாக வரும் அரசன் முன்னே...பொற் கொல்லர் வணங்குகிறார்]

என்ன?

சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டு விட்டான் மன்னவா!

எங்கே அவன்?

[அதிகாரி திடுக்கிட்டு விழித்தல்]

சிலம்பைப் பழுது பார்த்து விற்பதற்கு முயன்று கொண்டிருந்தான்...அவனைப் பிடித்துப் பத்திரப்படுத்தி விட்டுச் செய்தி சொல்ல ஓடி வந்தேன்...

அப்படியா?

[அதிகாரியிடம்]

பாண்டிய நாட்டில் கள்வனு? ம்...உடனே அவனைக் கொன்று வருக!...

[அதிகாரியும் பொற் கொல்லரும் புறப்படுதல்]

[பொற்கொல்லர், அதிகாரி, வீரர்கள்; கோவலன் இருந்த மண்டபத்திற்கு வருகின்றனர்]

பொற்கொல்லரே, போன காரியம் வெற்றி தானே?

நான் போன காரியம் வெற்றிதான்! ஆனால் நீ வந்த காரியம்தான் தோல்வியில் முடிந்து விட்டது.

அப்படியானால் மன்னருக்குச் சிலம்பு தேவையில்லையா?

மன்னருக்கேன் சிலம்பு? மகாராணிக்கல்லவா வேண்டும்.

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை