சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 32 · 32 / 38
[கோவலன் நகர - மாதரி பூ, மாங்காய், பழம் உள்ள தட்டு ஒன்றைக் கண்ணகியிடம் தருகிறாள்.]
அத்தான்! இந்த மல்லிகைப் பூ வாடுவதற்குள் வந்து விடுங்கள்!
அவ்வளவு சீக்கிரமா? இயலாது! இந்த மாங்காய் அழுகுவதற்குள் வந்து விடுகிறேன்!
அவ்வளவு நாட்கள் ஆகுமா?
ம்...கண்ணகி! சிலம்பை விற்று வாணிபத்திற்கு ஏற்பாடு செய்து...எல்லா முயற்சிக்கும் கொஞ்ச நாட்கள் ஆகாதா?
[மாதரி வருகிறாள், அவளிடம்]
அம்மா! கண்ணகி உங்கள் அடைக்கலம்.
[கண்ணகியின் கரம் பிடித்து அவளிடம் கொடுத்தல்]
சுருக்கமாகச் சொன்னால் என் உயிர் உங்கள் வீட்டில் அடைக்கலம். வருகிறேன் கண்ணகி! வருகிறேனம்மா!
[ஐயை முதலியோர் கண்ணகியிடம் ஓடி வந்து, குரவைக் கூத்துக்கு அவளை இழுத்துச் செல்கிறார்கள்]
[நூறு பொற் கொல்லர்களையும் நிறுத்தி வைத்துத் தலைமைப் பொற்கொல்லர் கேட்கிறார்]
ம்...நீதி மன்றத்துக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள்...யார் சிலம்பை எடுத்தது?...
நாங்களில்லை! ..நாங்களில்லை!...
பிறகு...சிலம்புக்குச் சிறகு முளைத்தா பறந்து விட்டது!...சரி...சரி...அந்தப் பகற் கொள்ளைக்காரன் யார் என்பதைப் பாண்டிய மன்னரே கண்டு பிடிக்கட்டும்...ம்...புறப்படுங்கள்...என்னோடு!...
[அனைவரும் பின்தொடரப் பொற்கொல்லர் புறப்படுகின்றார்]
[கோவலன் ஒரு வீட்டில் சிலம்பை விலை கூறுகிறான்]
எவ்வளவு விலையானாலும் சரி எடுத்துக் கொள்கிறேன். இரட்டைச் சிலம்பாக இருந்தால் கொடு.
ஐயா! இதிலுள்ள மாணிக்கப் பரல்களுக்காக இதைத் தனியாக வாங்கக் கூடியவர் யாரும்...
அதற்கென்றுள் அரண்மனைப் பொற்கொல்லரைப் போய்ப் பாரும்...அவருக்கு ஒரு வேளை தேவைப்படலாம்.
வணக்கம் அய்யா...
யாரோ வாழ்ந்த வீட்டுப் பிள்ளை—
[கோவலன் வேறு இருவரிடம் சிலம்பை விற்க முயல்கிறான்]
அடேயப்பா; விலை மதிக்க முடியாத சிலம்பு! சரி, நீ இதை எடுத்துக் கொண்டு அரண்மனைப் பொற்கொல்லரிடம் போ...அவர் விற்றுத் தருவார்!...
அடேடேடே...இதோ அவரே வருகிறாரே...பொற் கொல்லரே!
[பொற் கொல்லர் வருதல்]
என்ன?...
பொற்கொல்லரே, இவரிடம் ஒரு அழகான சிலம்பு இருக்கிறது.
சிலம்பு?
ஆமாம்...விலை மதிப்பில்லாத சிலம்பு; இதை விற்றுத் தர வேண்டுமாம்.
தருகிறேனய்யா. எனப்பா, நீ எந்த ஊர்?
பூம்புகார்.
தேடி அலைந்தது தானுகவே கிடைத்து விட்டது! நீ இந்தச் சிலம்போடு இந்த மண்டபத்திலேயே இரு; நான் அரசருக்குத் தெரிவித்து விட்டு உன்னை வந்து அழைத்துப் போகிறேன்.
