உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 28 · 28 / 38

வாழ்க ... வாழ்க ... ஐயை! உன் தாயார் மாதரி எங்கே யம்மா?

அம்மா ... சமணத் துறவிகளுக்குப் பாற்சோறு படைத்துவரப் போயிருக்கிறாள்...வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்!

கோவல!...வாருங்கள். மாதரி என்னும் ஆயர்குல மங்கை மிகவும் நல்லவள்...அவளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

[அனைவரும் பசக் கூட்டத்தோடு அதை விட்டு நகர்தல்]

[கவுந்தி,கண்ணகி,கோவலன்,ஐயை,...]

அதோ அம்மாவும் வந்து விட்டார்கள்.

...அம்மா...அம்மா...

ஆ! கவுந்தியடிகளா!...வரவேண்டும் ...வரவேண்டும்...

மாதரி! இவர்கள் ... கோவலன், கண்ணகி...இவர்களுடைய பெற்றோரின் பெயரைக் கேட்டாலே மதுரையிலுள்ளோர் ஓடி வந்து தங்கள் தங்கள் வீட்டுக்கு விருந்தினராக அழைப்பார்கள்....அவ்வளவு சிறப்பு மிக்க குடும்பத்தினர்! மதுரையில் இவர்களது வேலை முடியும் வரை உன் வீட்டிலேயே தங்க வைத்து...

தடையா சொல்லப் போகிறேன்? தாயே...தாராளமாக இருக்கட்டும். அம்மா...கண்ணகி! இதோ என் மகள் ஐயை உன்னை விட்டு நீங்காத துணையாக இருப்பாள்!

என் கடமை முடிந்து விட்டது. கோவல!...கண்ணகி...என் கண்ணே! போய் வருகிறேன் நான்...

தாயே...நீங்கள் எங்கள் கூட இருந்து எவ்வளவோ ஆறுதலாக இருந்தது!

எனக்குப் பதில்தான் மாதரி இருக்கிறாளே...மாதரி! கண்ணகியை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவள் உன் அடைக்கலம்! அவ்வளவுதான் சொல்லுவேன்...

[நெடுஞ்செழியனும் கோப்பெருந் தேவியும் இருக்கிறார்கள்....] கோப்பெருந்தேவி கேட்டுக்கொண்டே வருகிறாள்.]

எங்கே இன்னும் சிலம்பு வரவில்லையா?....இன்னுமா பழுது பார்க்கிறர் பொற்கொல்லர்?

[நெடுஞ்செழியன் ஓலையில் எழுதிக்கொண்டிருக்கிறான்.]

ஊகூம்...நான் கேட்டதற்குப் பதில் கூறாமல் அப்படி யென்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம்?

[ஊடல்]

கல்வியின் பெருமை பற்றிப் புறத்துறைப் பாடல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆமாம்!....புறப்பாடல்...போர் முழக்கம்! இதைத் தவிர வேறு பேச்சேயில்லை! இது...பள்ளியறை. பள்ளிக்கூடமுமல்ல ...பாசறையுமல்ல...தெரியுமா?

தமிழ்...ஒரு தென்றல்! அது எல்லா இடத்திலும் நுழையும். பாடலைக் கேள்...

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்”...

[அதற்குள் தோழி வந்து...]

அரசே; அரண்மனைப் பொற்கொல்லர் தங்களை அவசரமாய்க் காணவேண்டுமாம்!

வரச் சொல்!

[என்று வெளியே செல்லல்...வாயிற் படியில் நின்றவாறு....]

என்ன?

வணக்கம்...மன்னவா!

[நடுங்குகிறார்]

ஏன் நடுங்குகிறீர்? என்ன காரணம்?

மன்னிக்க வேண்டும்...அரசே;...மன்னிக்க வேண்டும்!

செய்தியைச் சொல்லும்... பொற்கொல்லரே!

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை