சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 27 · 27 / 38
வாழ்க தமிழ்! வாழ்க பாண்டியன் நெடுஞ்செழியன்!
[மன்னரும், அரசியும் அவையை வணங்கி விட்டு எழுந்து செல்லல்...கொலு மண்டபத்தையடுத்த தாழ்வாரத்தில் நடந்து செல்லும்போது,
அரசியின் காற்சிலம்பு ஒன்று கழன்று விழுகிறது...
அரசி, நின்று குனிகிறாள்]
என்ன?...
சிலம்பு பழுதாகி விட்டது!
[சிலம்பை எடுத்து] யாரங்கே!...
[தோழியும், ஒரு அதிகாரியும் வணங்குதல்]
இந்தச் சிலம்பை அரண்மனைப் பொற்கொல்லரிடம் கொடுத்துப்பழுது பார்த்துக் கொண்டு வரச்சொல்!
இன்னொரு சிலம்பையும் கொடேன்!
காலிலே சிலம்பில்லாமல் இருப்பதா...வேண்டாம்; இதை மாத்திரம் சீர்செய்தால் போதும்!
[இருவரும் போய்விடுதல்]
[அதிகாரி, கையில் சிலம்புடன் நிற்க...]
என்ன சிலம்பையே விழுங்கிவிடுவது போல் பார்க்கிறீர்கள்?
விழுங்கி விடலாமா என்றுதான் பார்க்கிறேன்! பைத்தியம்!...இது அரசாங்கச் சிலம்பு-தொட்டால் தொங்கிவிடும் தல!
[என்றபடி அவனைப் பிரிந்து நடக்கிறான். நடக்கும்போதே சிலம்பைப் பார்த்தவாறு தனக்குள்]
எத்தனை ஆயிரம் பொன் பெறுமோ இந்தச் சிலம்பு!
[பெருமூச்சுடன்]
ச்சா...ச்சா...ச்சா......இதுமாத்திரம், எனக்குச் சொந்தமாயிருந்தால் ...... ம் ...என் வீண் கனவு?....
[தானே சமாதானப் படுத்திக்கொண்டு நடக்கிறான்]
[அரசியின் உடைந்த சிலம்பை எடுத்துக் கொண்டு அதிகாரி தலைமைப் பொற்கொல்லரிடம் வருகிறான்.]
வாருங்கள், வாருங்கள்! இப்படி உட்காருங்கள்! எங்கே இவ்வளவு...?
அரசி கோப்பெருந் தேவியின் சிலம்பு இது. இதை விரைவில் பழுது பார்த்து அனுப்பச் சொன்னார்....மன்னர்.
[சிலம்பைக் கொடுக்கிறான், பொற் கொல்லர் பெட்டியில் வைக்கிறார்.]
அதற்கென்ன...நாளைக்கே கொண்டு வருகிறேன்.
[ஒரு பொற் கொல்லர் வேலை செய்வதைத் திருத்த, தலைமைப்பொற் கொல்லர் எழுந்து செல்லும்போது, அதிகாரி அந்தச் சிலம்பைத் திருடிவிடுகிறான்]
ஏன் அவ்வளவு பலமாகத் தட்டுகிறாய்? எவ்வளவு நுட்பமான வேலை இது; மணி மோதிரம் என்றால் மல்லிகை கல் செதுக்குவது போலவா செதுக்குவது? இதை நீ செய்ய வேண்டாம்! அவரிடம் கொடு; அய்யா, இதைக் கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள்.
(அதிகாரியிடம்) பிறகு...
ஆகா, வந்த வேலை முடிந்துவிட்டது! நான் அரண்மனைக்குப் போகிறேன். நாளைக்குள் சிலம்பை...
கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்.
நான் வருகிறேன்.
[கவுந்தியடிகள், கண்ணகி, கோவலன் வருதல்...மாடு ஆடுகள் ஓட்டி வரும் சிறுவர் சிறுமியரின் பாட்டொலி கேட்கிறது .... அந்த இளங் கூட்டத்திற்குள் ஐயை என்னும் அழகிய பெண் தலைமை வகித்து வருகிறாள். அவள் கவுந்தியடிகளைப் பார்த்து...]
அடிகளே...வணக்கம்! வணக்கம்!
