உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 26 · 26 / 38

கண்ணகி...உனக்கு நான் எவ்வளவு கொடுமை செய்துவிட்டேன். அய்யோ...இப்படி யெல்லாம் நடந்து உனக்குப் பழக்கமேயில்லையே!

[முள்ளைக் கோவலன் எடுத்துவிட்டு]

இந்த முள்ளைவிடக் கொடுமையானவன் நான்!...இதாவது உன் காலில் காயத்தை உண்டாக்கியது; இந்தப் பாவி உன் நெஞ்சத்திலே அல்லவா...ஆறாத காயத்தை ஏற்படுத்தி விட்டேன்?

இந்த முள்ளை விடக் கொடுமையானவன் நான்...

[குத்திக் கொள்ளப் போகிறான்]

கொடுமையானவன் நான்...என் கண்ணகி படும் கஷ்டத்தைப் பார்க்காமல்.. ஏ...முள்ளே! நீயே என் கண்களைக் குருடாக்கி விடு!

[தடுத்து...அலறி]

அத்தான்!...என்னத்தான் இது! உங்கள் அழகைப் பார்த்துப் பார்த்து என் துயரங்கள் மறக்கிறேனே, அது கூடப் பிடிக்கவில்லையா உங்களுக்கு! என்னை ஆருத் துயரத்தில் அமிழ்த்தி விட்டீர்கள்!

கோவல!

“இடுக்கண் வருங்கால் நகுக!” என்ற திருக்குறளின் மறந்தாயா? துன்பங்கள் வெற்றி காணுவதுதான் வீரனுக்கு அழகு—புறப்படு!....இதோ...மதுரைத் தென்றல் கூட வீச ஆரம்பித்து விட்டது.....

பாண்டியர் தலைநகர் இன்னும் சிறிது தொலைவுதான்...வாம்மா கண்ணகி—

[நடக்கிறார்கள்]

*

[நடைபாதையில்—வயல் மடையிலேயிருந்து ஒரு மீன் துள்ளி வரப்பில் விழுந்து துடிக்கிறது!]

ஆகா! ஆபத்தை உணராமல் உற்சாகத்தில் இப்படித்தான் குதிக்கிறார்கள்...சில மனிதர்கள்!

என்னைப் போல!

எவ்வளவு அழகான மீன்! பாண்டிய நாட்டுக் கொடியின் சின்னமல்லவா மீன், அதனுல்தான் பயமில்லாமல் துள்ளுகிறது!

[என்றவாறு அதைத் தண்ணீரில் விடுகிறார்...தண்ணீரில் மீன் நீந்திச் செல்லுகிறது...

அதிலிருந்து பாண்டியநாட்டு மீன் கொடி பறக்கும் காட்சி]

[பாண்டிய நாட்டு மீனக் கொடி பறக்கும் கோட்டை ... அதைத் தொடர்ந்து கொலு மண்டபத்திலேயுள்ள மீன் சின்னம் ... நெடுஞ்செழியப் பாண்டியனின் குரல்!....]

பாண்டியன் நெடுஞ்செழியனின் கொலு மண்டபத்தில் அநீதிக்கு இடமில்லை! வழக்குரைக்க வந்திருக்கும் நீங்கள் இருவருமே தமிழில் புலமை மிக்கவர்கள். உங்கள் வழக்கின் போக்குக் கண்டு நான் மிகக் குழப்பமடைகிறேன்.

[தொடர்ந்து ... நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் காட்சியாதல்]

[சுவடியைக் கையில் பிடித்தவாறு]

புலவர் அருளாளரே! இந்தக் காவியம் உம்முடையதுதான் என்பதற்கு உமது கையெழுத்தை ஆதாரமாகக் காட்டுகிறீர்! அதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! இதற்குப் புலவர் மல்லவாணரின் மறுப்பு ஏதோ?...

கையெழுத்து அருளாளருடையது என்பதற்காகக் காவியம் அவருடையதாகி விடுமோ?...அரசே! நான் சொல்லி என் மாணவரான அருளாளர் எழுதினர் என்பதே உண்மை!... ஆகவே காவியம் என்னுடையதே!

அருளாளரே?

தமிழ்ச் சங்கம் வளர்க்கின்ற பாண்டிய மன்ன!...தமிழின் மீதாணையிட்டுக் கூறுகிறேன். என் சிந்தனையின் விளைவே இச் சிறு காவியம்! நான் என்றைக்கும் மல்லவாணருக்கு மாணவனாயிருந்ததே யில்லை!

[யோசித்து]

ம்!...சிக்கலான வழக்கு! சரி நான் ஒன்று முடிவாகக் கூறுகிறேன் ... காவியம் உங்களில் யாருக்குமே சொந்தமில்லை. உங்கள் கண் எதிரே இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்தி விடுகிறேன்...சரிதானே?

வேண்டாம்; வேண்டவே வேண்டாம்! தமிழைக் கொளுத்தும் தகாத செயல் தமிழ் காக்கும் பாண்டியன் அவையில் நடைபெற வேண்டாம்! நாட்டுக்காகவே நான் காவியம் எழுதினேன். எனக்காக அல்ல; அது யார் பெயரால் வந்தாலும் வரட்டும்! மல்லவாணர் பெயராலேயே காவியம் இருக்கட்டும்...அதை அழித்து விடாதீர்கள்!

பெற்றவருக் கல்லவா பிள்ளையின் அருமை தெரியும் — அதைப்போல்தானே! இதிலிருந்தே காவியத்தின் தாய் அருளாளர் என்பது தெளிவாகி விட்டது. மல்லவாணர் உழைக்காமல் ஊரார் பொருளைத் திருடிப் புகழ் வாங்க ஆசைப்படும் ஒரு போலிப் புலவர் என்பது விளங்கிவிட்டது! அதனால் தான் காவியம் அழிவதைப்பற்றிக் கவலைப்படவில்லை அவர்!... அருளாளரே! நீரே வென்றீர்! இது உமது காவியமேதான்!.... இதோ!....

[அருளாளர் வாங்குதல்]

அமைச்சரே! இவருக்குப் பரிசாக ஐயாயிரம் கழஞ்சு பொன் தருவீராக!

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை