உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 25 · 25 / 38

வயல் வெளிகளில் செல்வோமானால் நீர் நாயினுல் கொலப்பட்ட வாளை மீன்கள் உயிர் தப்பத் துள்ளி, மேலே விழும். அதைக் கண்டு, கண்ணகி பயப்படுவாள்.

கரும்புத் தோட்டங்களில் நடக்கும்போது.. கரும்பின் மீது தவறி உராய்ந்துவிட்டால் அங்குள்ள பெரிய தேன்கூடுகள் உடைந்து அருவி நீரோடு கலந்து போகும்

என் பொருளெல்லாம் அப்படித்தான் பாழாயிற்று!....

சோலைவழிச் சென்றால்...கிளைகளில் தாழ்ந்து தொங்கும் பலாப் பழங்கள் எதிரிகள் போல் தலையில் முட்டும்.

அய்யோ....நான் சென்ற தவறுன வழியில் யாரும்...என் மனச்சாட்சி கூட....அதுபோல என்னைத் தடுக்க வில்லையே!

கோவலா! மனச்சாட்சி உறங்கும் போதுதானே மனக் குரங்கு ஊர்சுற்றக் கிளம்புகிறது! நடந்தவைகளை மறந்துவிடு!...இனி நடப்பவை நல்லவைகளா யிருக்கட்டும்!

[பயணம் நடத்துகிறார்கள்]

[காட்டினிடையே கோவலனிடம், மாதவி தீட்டிய ஓலையைக் கோசிகமணி தருகிறான்]

[மாதவி குரல்]

பேரன்புடையவரே!... தங்கள் அடி தொழுது வணங்குகின்றேன். பெற்றோர்க்குப் பணி புரியாமல் உற்ற மனைவிக்கும் தீங்கு செய்து பிழைப்பு நடத்த வெளியூர் செல்வதற்கும் நானே காரணமானேன்—என் தவற்றுள் வருந்தும் உங்கள் நெஞ்சை ஆற்றிக்கொள்ள வேண்டுகிறேன்.

இங்ஙனம், உங்கள் அன்பு.

[கோவலன் படிக்கிறான்...திரும்ப ஓலையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிந்தி ஓலையில் விழுகின்றன.]

மாதவியிடம் சொல்லுங்கள்...கோவலன் பிழைக்காக வருந்துகிறான் என்று! அவள் எனக்கு எழுதிய இந்த ஓலை என் தாய் தந்தையார்க்கும் பொருந்தும்...அதனால் இதை நான் கொடுத்ததாக என் தந்தையிடம் கொடுத்து விடுங்கள்...

[மீண்டும் ஓலையைப் படிக்கிறான்]

ஓலை மாசாத்துவான் கையிலிருக்கிறது... (கோவலன் குரல்)

“பேரன்புடையவரே! தங்கள் அடி தொழுது வணங்குகின்றேன். பெற்றோர்க்குப் பணி புரியாமல், உற்ற மனைவிக்கும் தீங்கு செய்து, பிழைப்பு நடத்த வெளியூர் செல்வதற்கும் நானே காரணமானேன். என் தவற்றுள் வருந்தும் உங்கள் நெஞ்சத்தை ஆற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.

இங்ஙனம் உங்கள் அன்பு,

[மாசாத்துவான் பெருமூச்சு...

அப்போது மாதவி ... மணிமேகலையுடன் வருகிறாள். நாலைந்து பெண்கள் தட்டுகளில் பொற்காசுகளை நிரப்பிக்கொண்டு வருகிறார்கள்.]

யார்?

மன்னிக்கவும்...தங்கள் பெருமை வாய்ந்த குடும்பத்தின் சீரழிவுக்குக் காரணமான பாவி...மாதவி நானேதான்! இதோ! எனக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் குவிக்கப்பட்டிருந்த தங்கள் வீட்டுச் செல்வம். ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன மாதவி...நீ மாற்றுக் குறையாத பசும் பொன் என்று இப்போதே உணர்ந்தேன்!

இனி யார் உணர்ந்தென்ன உணராவிட்டால் என்ன? நான் உதிர்ந்த மலராகி விட்டேன்!

மாதவி! இந்தப் பொற்குவியல் என் மகன் உனக்காக அளித்தது. இதை நான் தீண்ட மாட்டேன்...திரும்பப் பெறுவது தீங்கானது.

எனக்கு ஏன் பொருள்? என் அன்புச் செல்வமே பறிபோய் விட்ட பிறகு...அழிகின்ற இந்தச் செல்வம் எதற்காக? எங்கே...என்னை மன்னித்தேன் என்று ஒரு முறை சொல்லுங்கள்!

மாதவி...நீ என் அன்பு மருமகள்!

அய்யோ...மணிமேகலை! எவ்வளவு நல்ல குடும்பத்தை உன் தாய் நாசமாக்கி விட்டாள் பாரம்மா! பாரம்மா!!

[அழுகிறாள்]

அழாதேயம்மா...எங்கே, குழந்தையைக் கொடு!

[குழந்தையை வாங்குகிறார். குழந்தை சிரிக்கிறது...அவர் கண்களிலும் கண்ணீர் தேங்குகிறது.]

[கவுந்தி, கண்ணகி, கோவலன் மூவரும் வயல் வெளியில் பசுமை நிறைந்த பயிர்களுக்கு இடையே நடந்து செல்கிறார்கள்.

மலர்த் தொடர்களும் காட்சியளிக்கின்றன—]

காலில் முள்ளுத்த ... கண்ணகி உட்கார்ந்து எடுக்கிறாள்.]

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை