உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 24 · 24 / 38

சித்ராபதி...சித்ராபதி...என்ன இது?

நீயும் வந்து விட்டாயா; குடிகெடுக்கும் கூனிக் கிழவி!...இராமாயணத்திலே ஒரு கூனிக் கிழவி...நாட்டையே கெடுத்தாளாம்; நீ...இந்த வீட்டையே கெடுக்க வந்து சேர்ந்தாய்.

மாதவி...அடக்கிப் பேசு!...

ஏன்?...எதற்காக?...பாவிகளே! நீங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டுதானே எனக்கும் தெரியாமல் அவருக்கும் தெரியாமல் அவர் வீட்டுப் பொருளையெல்லாம் கொள்ளையடித்திருக்கிறீர்கள்? பொருளுக்காகவா நான் அவரைக் காதலித்தேன்?

நீ காதலிக்கவில்லை...ஆனால் நாங்கள் பொருளுக்காகத்தான் உன்னைக் காதலிக்க விட்டோம்.

போதும் போதும்; என்னை உயிரோடு விழுங்க, தாய் உருவில் வந்த பேய்; அதற்கு முன்பே புகார் நகரத்தைக் கெடுக்கப் புறப்பட்ட கூனிப் பூதம்! உங்கள் முகத்திலேயே விழிக்கக் கூடாது; போய் விடுங்கள்...இதை விட்டுப் போய் விடுங்கள்!

[குழந்தையிடம்]

அம்மா மணிமேகலை நம் கதியைப் பார்த்தாயா? நமக்கு யாருமே ஆதரவில்ல யம்மா...ஆதரவில்ல!

[என விம்மி அழுகிறாள்]

[கவுந்தியடிகளின் பாடல் ஒலி கேட்கிறது.

அந்த ஒலியினூடே....கண்ணகியும் கோவலனும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

எதிரே கவுந்தியடிகள் வருவதைக் கண்டு கோவலன் அடிகளின் கரங்கூப்பி வணங்குகிறான்.]

வணக்கம். தாயே!

[கண்ணகியிடம்]

கண்ணகி! இவர்கள்தான் கவுந்தியடிகள். சமண மதத் துறவி!

வணக்கம்....

வாழ்க! வாழ்க! குழந்தைகள் நீங்கள்....?

வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உயர்ந்த குதிரைகளும்...ஏற்றுமதிக்கெனக் குவியும் மிளகு மூட்டைகளும்...வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்...குடமலையிற் பிறந்த ஆரமும் அகிலும்...தென்கடல் முத்தும், குணகடல் பவளமும்...கங்கையின் பொருளும்...காவிரியின் பயனும் நிறைந்து தோற்ற மளிக்கும் சோழனின் கடற்கரைப் பட்டினமாம் பூம்புகார்த் தில நகரே எமது ஊர். என் பெயர் கோவலன். இவள் என் வாழ்க்கைத் துணைநலம்...கண்ணகி!

கோவலன்...? பெருவணிகர் மாசாத்துவனின் மகன்?...குழந்தாய் உனக்கு வந்த இடர் யாது?

சுடர் விளக்கம் கண்ணகிக்குத் துரோகம் செய்தேன்!...அது போதாதென்று படர்கின்ற முட்புதரில் என் பத்தினியின்

பாதம் பட்டுப்...பாகற்பழம் போலச் சிவக்கின்ற பாதகத்தைச் செய்கிறேனே.

வருந்தாதே!....தவறு செய்தவர்கள் தங்கள் தவற்றை உணரும்போது, அதுவே பெருந் தண்டனையாகிறது!....பரவாயில்லை...மதுரைக்குத்தானே போகிறீர்கள்! நானும் வழித் துணையாக வருகிறேன்—பேசிக் கொண்டே போகலாம்.

அத்தான்....இன்னும் மதுரை எவ்வளவு தூரம்?

ஆறு ஐந்து காதம் இருக்கும்...அவ்வளவுதான்.

கண்ணே! உன் கணவர் ஏமாற்றுகிறார்...ஆறு ஐந்து காதம் என்றால்...ஆறைந்து முப்பது காதம்...என்னம்மா?....நடக்க முடியவில்லையா?

[கோவலனிடம்]

கோவலா!

நான் வேண்டுமானால் போய்விடுகிறேன். நீ...கண்ணகியைத் தூக்கிக் கொண்டு

என்ன?

நீ அவளுக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை வேண்டாமா? அதற்காகச் சொன்னேன்...அதுமட்டுமல்ல;

[நடந்தவாறு]

கண்ணகிக்கு இவ் வழியெல்லாம் நடந்து பழக்கமிருக்காது! வழியில் வளர்கின்ற தோண்டிய குழிகளில், வாடிய சண்பக மலர்கள் குவிந்து மூடியிருக்கும்...கவனமாகச் செல்லாவிட்டால்...அந்தப் பொய்க் குழிகளில் விழுந்துவிட நேரும்...

வாழ்க்கைப் பாதையுங்கூட அப்படித்தானே?

நிச்சயமாக! ஏன் அனுபவ உண்மை.

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை